சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்?

கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்!

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (அக்.7) நாளை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அக்டோபர் 8-ம் தேதி வரை கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் என்றால் என்ன ?

தமிழகத்திற்கு நாளை (7.10.2018) ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் நாளை  அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் அறையில் இருந்து தொலைக்காட்சி, டைனிங் டேபிள், வாசனை திரவியங்கள், உள்ளிட்ட வசதிகள் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறிப்பிட்டத்தக்கது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : வரும் 7 ஆம் தேதி அதீத மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்!

தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுகவின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்கள் செல்வாக்குள்ள ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான்! – பொன் ராதாகிருஷ்ணன்

மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ‘நான் முதல்வரானால்’முதல்வர் போல நடிக்க மாட்டேன் ஊழலை ஒழிப்பேன் பதவிக்கேற்ப நடந்து கொள்வேன் என்று சரமாரியாக பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துக்கு ஆளும் கட்சி கண்டனமும், ஒருசில கட்சிகள் வரவேற்பும் தெரிவித்துள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகுறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜயின் அவரின் அரசியல் பயணத்தை மறைமுகமாக எடுத்துகாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்ட்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேசியதாக சீமான் மீது புகார்

சென்னை காந்தி மண்டபத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் வெளிநாடுகளில் நடிகர் ரஜினி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.

எம்.எல்.ஏ கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் கருணாசை போலீஸ் தேடுகிறது. இதனையடுத்து பூலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் நினைவு நாளை சாக்லேட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்

காமராஜரின் 44ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து தட்டில் அவற்றை கொட்டி அனைவருக்கும் விநியோகிக்க வந்தனர். இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், நினைவு நாளில் சாக்லேட் வழங்குவதா எனக் கண்டிக்கவே, அந்த தொண்டர்கள் வேகமாக சாக்லேட்டுகளை ஒரு பையில் கொட்டி விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர்.

மாருதி சுசூகி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னையில் கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. கிண்டியில் மாருதி சுசூகி நிறுவனத்திற்குச் சொந்தமான ஷோரூம் உள்ளது. இதன்பின்புறம் கார் உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் சர்வீஸ் மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. நேற்று இரவு 10.15 மணியளவில் ஷோரூம் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார்

காவேரிப்பட்டிணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார். உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர்  இன்று காலை உயிரிழந்தார். இவர் 1996 முதல் 2001 வரை காவேரிப்பட்டிணம் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.