வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

கேடிஎம் இந்தியா தனது 125 டியூக் மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை தொடர்ந்து இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தொடங்கப் பட்டுள்ளதை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள கேடிஎம் டீலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மோட்டார் சைக்கிளை வாங்க வாடிக்கையாளர்கள் வெறும் 1000 ரூபாய் மட்டும் டோக்கன் பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : Autonews360

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு

அக்டோபர் மாதம் விழாகால சீசனில் பெரியளவிலான பொருட்கள் வாங்கும் மாதமாக இருந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு, அணைத்து பொருட்களுக்கும் சலுகை அறிவிக்கப்படும். இதற்கு கார்கள் விதிவிலக்கு அல்ல, இந்த விழாக்காலத்தை முன்னிட்டு, மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டியோர்  கார்களுக்கு 90 ஆயிரம் வரையிலான  சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Autonews360

விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்

புதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை, டெல்லியில்). இந்த புதிய மாடல்கள், பெர்ல் பிளாட் ஸ்டார்டஸ்ட் ஒயிட்/ மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே/ என்போனி மற்றும் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக்/மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என மூன்று கலர் ஆப்சன்களில் கவாசாகி நிறுவனம் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க : Autonews360

ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ

மசீராட்டி நிறுவனம் 2018 மை மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 2.25 கோடி ரூபாய் விலையாகும். (எக்ஸ் ஷோ ரூம் பான்-இந்தியாவில்). மேம்படுத்தப்பட்ட மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ கார்கள் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த சர்வதேச மாடல்கள், மறுசீரமைப்பு செய்த ஸ்டைல்களுடன், ரெஜிஜிகேட் செய்யப்பட்ட பவர்டிரெயின்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதில், மறுசீரமைப்பு செய்யப்பட்ட இன்டீரியர்களுடன் மார்டன் ஸ்கிரீன்களுடன் பல்வேறு வசதிகளும் இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க : Auto News360

விழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது

வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் இந்த விழாக்கால சீசனில், புதிதாக கனெக்ட் எடிசன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கார்களை வெளியிட்டுள்ளது. வோக்ஸ்வாகன் கனெக்ட் என்பது, சிறந்த திறன் கொண்ட வாகன அசிஸ்டென்ட் சிஸ்டமாகும். இது வாடிக்கையாளர்களை பல்வேறு தகவல்களை எளிதாக  தெரிந்து கொள்ள முடியும்,  வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீோ கனெக்ட் எடிசன்களிலும், புதிய லாபிஸ் ப்ளூ பெயின்ட் ஸ்கீம் உள்பட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.  இந்த கனெக்ட் எடிசன்களுக்காக எந்தவிதமான அதிக கட்டணமும் வசூல் செய்யப்படாது என்று  வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : Autonews360

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்?

கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

ரூ. 6.80 லட்ச விலையில் அறிமுகமானது SWM சூப்பர் டூயல் டி

கைனடிக் மோடோராயல் நிறுவனம், இத்தாலிய மோட்டார் சைக்கிள்களான SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்களை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. SWM சூப்பர் டூயல் டி பேஸ் மோட்டார் சைக்கிள்கள், 6.80 லட்ச மற்றும் SWM சூப்பர் டூவல் டி மோட்டார் சைக்கிள்கள் 7.30 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. (அனைத்து விலைகளும் இந்தியாவில், எக்ஸ் ஷோ ரூம் விலை). இந்த மோட்டார் சைக்கிள்கள் 600cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 56bhp ஆற்றல் மற்றும் 53.5 டார்க்யூவை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆறு-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Autonews360

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

சுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள்  இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசெல்ஸ் பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.  அவற்றை இங்கே விரிவாக காணலாம். மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

இந்தியாவில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63; விலை ரூ. 2.19 கோடி

புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63 கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் இந்தியா விலை 2.19 கோடி ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை). புதிய தலைமுறை 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி 63, கார்கள் வழக்கமான ஸ்கொயர் ஆப் அடித்தளங்களுடன், அழகிய வடிவமைப்பு, நுட்பட்மான வளைவுகளுடன் முதல் முறையாக மிகவும் அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உண்மையான மாற்றமாக, புதிய ஜி-கிலாக்ஸ் மற்றும் ஜி63 வகைகளில் புதிய உயர்தரம் கொண்ட உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவை, எஸ்-கிளாஸ் போன்ற தோற்றத்தை அளிக்கும். குறிப்பாக, ஜி63 கார்கள், பழைய உள்கட்டமைப்பு பேக்கேஜ்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும் படிக்க : Autonews360

பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்

தமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார். கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார். தற்போது 62 வயதை அடைந்துள்ள இவர், முயற்சியாலேயே, பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானம் என்ற பெயரை பெற்றது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் விற்பனையும் 80 சதவிகிதம் உயரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். தற்போதும் பெப்சிகோ நிறுவனத்தின் சேர்வுமனாக இருந்து வரும் நூயி, வரும் 2019 வரை போர்டு ஆஃப் டைரக்டர் ஆகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். நூயி, தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட நிலையில், தனது பணியில் வெற்றி பெற கடைபிடித்த 5 முக்கிய பழக்கங்களை பற்றி அவரே கூறியுள்ளார்.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் அறிமுகமானது

விழாகால சீசனை முன்னிட்டு மாருதி சுஸுகி நிறுவனம், உதிரி பாகங்களுடன் கூடிய வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன் கார்களில் மெக்கானிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தபோதும் உதிரிபாகங்கள் கிட்களுடன் உடன் வெளிவந்துள்ளது இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை மேலும் அழகு படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Autonews360

‘சர்கார்’ விநியோக உரிமையில் சாதனை

சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.. ராமநாதபுரம் பகுதிக்கான சர்கார் திரைப்பட விநியோக உரிமையில் கிடைத்த வசூல், வேறு எந்த பிரபல நடிகர்களின் படமும் செய்யாத அளவிற்கு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • முறையாக ஏ.சியை சர்வீஸ் செய்ய வேண்டும்.
  • நம்பிக்கைக்குரிய, தரமான மெக்கானிக்கிடம் ஏ.சி சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.
  • விண்டோ ஏ.சியைவிட ஸ்பிலிட் ஏ.சி சிறந்த்து
  • வாயுவின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்
  • தவறான வாயுவை ஏ.சியில் நிரப்பினாலும் ஆபத்து ஏற்படலாம்
  • ஏ.சி பயன்படுத்தும்போது கதவு சன்னல்களை மூடி வைத்திருக்கவேண்டியிருக்கும். இருந்தாலும், தினசரி சிறிது நேரமாவது கதவு, சன்னல்களை திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

அறையின் ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் திறக்கும்போது ஏ.சியை நிறுத்த மறக்கவேண்டாம். இல்லாவிட்டால் உங்களது மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும். காலையில் ஏ.சியை நிறுத்திய பிறகே, ஜன்னல் மற்றும் கதவுகளை திறக்கவும்

ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர் . ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், தங்கள் புதிய பெட்ரோல் வெர்சன் தயாரிப்பான X1 வகை எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காரின் விலை 37.50 லட்ச ரூபாயாகும். பிஎம்டபிள்யூ கார்கள் X1 வெர்சனை போன்றே புதிய X1 பெட்ரோல் கார்களுடம் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டவையாகும்.

மேலும் படிக்க : Autonews360

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செளத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலத்துடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

ச‌ரிவுட‌ன் தொட‌ங்‌‌‌கிய இன்றைய ப‌ங்கு‌ச் ச‌ந்தை

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி எதிரொலி இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 200 புள்ளிகள் குறைந்து 34,090 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 90 புள்ளிகள் சரிந்து 10,226 புள்ளிகளாக இருந்தது.

ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

சுசூகி நிறுவனம் XT வகை வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை 7.46 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் டி மோட்டார் சைக்கிள்கள், ஹயபுசா மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து சுசூகி நிறுவனத்தால் உள்ளுரிலேயே அசம்பிளி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும்.

மேலும் படிக்க : Autonews360

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்!

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (அக்.7) நாளை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அக்டோபர் 8-ம் தேதி வரை கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு

ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது என்று சசிக்குமார் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சோமசுந்தரம், சனந்த் செட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் படத்தில் இணைந்துள்ளார் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் சசிக்குமார், “ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எனது நன்றி”என்று கூறியுள்ளார்.

ரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜுபிட்டர் ஸ்கூட்டர் வகையில் புதிய படைப்பாக சிறப்பு எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் “ஜுபிட்டர் கிராண்ட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர்களில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டவை 55 ஆயிரத்து 936 ரூபாய் விலையிலும், டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டவை 59 ஆயிரத்து 648 ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. மேற்குறிய இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மேலும் படிக்க : Autonews360

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது.  இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க : Autonews360

நாளை ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் என்றால் என்ன ?

தமிழகத்திற்கு நாளை (7.10.2018) ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் நாளை  அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

2018 அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். இவர்களுக்கு நடந்த அநீதிகளை ஐநா  வரை கொண்டு சென்றார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக  நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரச்சனை ஊழல்தான். ஊழலை ஒழிப்பதுதான் இங்கு கடினம். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார். விஜய் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது அவர் சொன்னப்படி ஊழலுக்கு எதிராக என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டால் கண்டிப்பாக சகோதர மனப்பான்மையுடன் வரவேற்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ’சர்கார்’படக்குழுவினருக்கு கடும் எச்சரிக்கை!

விஜய்யின் 62வது படமான சர்கார். மிகப்பெரும் பொருட்செலவில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தநிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார் “சர்கார் படக்குழுவினர் கவனத்துக்கு.. சர்கார் படம் உருவாக பலரும் தங்களது கடின உழைப்பைச் செலுத்தியுள்ளனர். இருந்தாலும், சில ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பல பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். வரும் காலத்தில் எங்களது அனுமதியின்றி இதுபோல பேட்டிகளைக் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.

விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை” – தமிழிசை

சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரல் ஆகியுள்ளது. அவரது அரசியல் பேச்சு பல அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் கூறிய கருத்துக்கெல்லாம் பதில் கூறி அவர் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

கிங் கோலி 24வது சதம் அடித்து சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிங் கோலி தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டனாக கோலி அடித்த 17வது சதம் இதுவாகும். இந்திய அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கின் 23 டெஸ்ட் சத சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் அறையில் இருந்து தொலைக்காட்சி, டைனிங் டேபிள், வாசனை திரவியங்கள், உள்ளிட்ட வசதிகள் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறிப்பிட்டத்தக்கது.

`பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் ரிலீஸ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இதில் ரஜினியுடன் த்ரிஷா சிம்ரன் மற்றும் பாபிசிம்ஹா நடிக்கின்றனர் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உற்பத்தி வரி குறைப்பு – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைகிறது!

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். இந்நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : வரும் 7 ஆம் தேதி அதீத மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்!

தமிழகம் முழுவதும் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுகவின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அறிமுக டெஸ்ட்டிலேயே மிரட்டல் சதம் விளாசினார் பிரித்வி ஷா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்தார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா அட்டகாசமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை புரிந்துள்ளார் பிரித்வி ஷா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி (102), புஜாரா (67) அவுட்டாகாமல் இருந்தனர்.

மக்கள் செல்வாக்குள்ள ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான்! – பொன் ராதாகிருஷ்ணன்

மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். ‘நான் முதல்வரானால்’முதல்வர் போல நடிக்க மாட்டேன் ஊழலை ஒழிப்பேன் பதவிக்கேற்ப நடந்து கொள்வேன் என்று சரமாரியாக பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துக்கு ஆளும் கட்சி கண்டனமும், ஒருசில கட்சிகள் வரவேற்பும் தெரிவித்துள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகுறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜயின் அவரின் அரசியல் பயணத்தை மறைமுகமாக எடுத்துகாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, சமீபத்தில் இவரின் வில்லன் நடிப்பில் வெளிவந்த சாமி 2 இவருக்கு மிக பெரிய நல்ல பெயரை வாங்கி கொடுத்தது தற்போது ரஜினியின் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்ட்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பறவைக்கு 3-டி செயற்கை அலகு

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், ஹார்ன் பில் என்னும் பெரிய அலகு கொண்ட பறவைக்கு புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்ட பின் அதற்கு 3-டி தொழில்நுட்பத்தாலான செயற்கை அலகு பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஜுராங் பறவைகள் பூங்காவில் இருக்கும் அந்த 22 வயது வண்ணப்பறவைக்கு 8 செ.மீ நீளத்தில் புற்று நோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர். சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் அகற்றப்பட்டன. ஒரு முழு 3-டி அலகு ஜேரிக்காக உருவாக்கப்பட்டது.

இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவி அளித்தது கூகிள்

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவிகளை கூகிள் நிறுவனம் நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ப்ளிழ்யான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்தோனேசியா நிவாரண உதவிகளுக்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்றார்.

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். வழக்கமாக தொடக்க வீரர்களாக விளையாடும் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் இப்போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளதால், யார் முதலில் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை?

‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை தற்போது ‘பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. அதனால் தான் கலந்துகொள்ள முடியவில்லை என்று ரஜினி தரப்பினர் கூறுகிறார்கள்.

மோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேசியதாக சீமான் மீது புகார்

சென்னை காந்தி மண்டபத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் வெளிநாடுகளில் நடிகர் ரஜினி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.

முதல் முறையாக சர்பேஸ் ஹெட்போன்கள் அறிமுகம்

சர்பேஸ்  லேப்டாப்களை (surface Laptop) வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2 மற்றும் சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல்முறையாக சர்பேஸ் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.  சர்பேஸ் ஹெட்போன்களில் 13 லெவல் நாய்ஸ் கண்ட்ரோல் லெவல் கொண்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோபோன்களை கவர் செய்யும் வகையில் இரண்டு பிம்கள், இயர் கப்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக இதில் 8 மைக்ரோபோன்கள் உள்ளன. இதன் மூலம் இதை பயன்படுத்துபவர்கள் தேவையான சத்தங்களை தெளிவாக கேட்க முடியும்.

விராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர்கள்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசுக்கு தவறான வகையில் அவுட் கொடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள், ஹேக் செய்துள்ளனர். இணையதளத்தின் முகப்பில் லிட்டன் தாஸ், ஸ்டம்பிங் செய்யப்படும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர். அதில், லிட்டன் தாசின் கால்கள், சரியாக கோட்டில் இருக்கும் போது அவுட் கொடுத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால் ஒவ்வொரு முறையும் இணையதளம் முடக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலை கேட்டிருந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை செயலகம், மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 245 எம்.பிக்களும் உள்ளனர்.  இதில் மக்களவை  எம்.பிக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூ. 1,584 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பாடல்களை வெளியிட்ட இணையதளம்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று  மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட்டை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. அந்த ட்வீட் வெளியான வேகத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். சர்கார் பாடல்கள் வெளியான சிறிது நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது. இதையடுத்து மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த 5 பாடல்களும் வெளியிடப்பட்டன.

சாம்பியன் ஆப் எர்த் விருது பெறுகிறார் மோடி

ஐநா.சபையின் 73வது பொதுச்சபை கூட்டத்தின் போது பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கும் சுற்றுச்சூழலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரெஸ் நேரில் விருதை வழங்க உள்ளார்.

சிறு நகரங்களில் அதிகரித்து வரும் வீல் அலாய்மென்ட் நிலையங்கள்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தற்போது சிறுநகரங்களில்  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து வித முன்னணி நிறுவனங்களின் டயர்கள் விற்பனை நிலையங்கள் அதிகளவு திறக்கப்பட்டுள்ளது. மேலும் டயர்கள் மாற்றும்போது வீல் அலாய்மென்ட் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கணிப்பொறி வசதியுடன் அலாய்மென்ட் கருவி இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் கொண்ட கடைகள் தற்போது பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு வந்துவிட்டடது.

மேலும் படிக்க : Autonews360

எம்.எல்.ஏ கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு நெல்லையில் தமிழ்நாடு தேவர் பேரவை நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் கருணாசை போலீஸ் தேடுகிறது. இதனையடுத்து பூலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி கருணாஸ் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது.  ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதுன் முறையாகும்.

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”. இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.

எஸ்ஜெ சூர்யா புதுமையான வேடத்தில் நடிக்கும் “மான்ஸ்டர்”

மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்ஜெ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “மான்ஸ்டர்” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். எஸ்ஜெ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “மான்ஸ்டர்” குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் எஸ்ஜெ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சபரிமலையில் பெண்களுக்கென தனி வரிசை சாத்தியமில்லை – கேரள அமைச்சர்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என கேரள அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பெண்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்திடக் கூடும் எனவும், அது பாதுகாப்பற்றது என்பதால் தனி வரிசை சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.

காமராஜர் நினைவு நாளை சாக்லேட் கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்

காமராஜரின் 44ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து தட்டில் அவற்றை கொட்டி அனைவருக்கும் விநியோகிக்க வந்தனர். இதைக் கண்ட நிர்வாகி ஒருவர், நினைவு நாளில் சாக்லேட் வழங்குவதா எனக் கண்டிக்கவே, அந்த தொண்டர்கள் வேகமாக சாக்லேட்டுகளை ஒரு பையில் கொட்டி விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர்.

கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

வரும் நவம்பர் மாதம்  முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2014 நவம்பருக்குப் பின் வந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

“சர்க்கார்” விஜயிடம் பாராட்டு பெற்ற “பரியேறும் பெருமாள்”

தமிழ் சினிமாவை இன்று பட்டிதொட்டி வரைக்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் என்றால் பரியேறும் பெருமாள் படம் தான். இந்த படத்தைப் பார்த்த நடிகர் விஜய் உள்பட திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து அதிக திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த செய்தியை இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்வல் காமிக்ஸ் வேனம் படத்தை பிரபலப்படுத்த பைக் அணிவகுப்பு

சூப்பர் ஹீரோவின் சாகச காட்சிகளுடன் வெளியாகும் மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் “Venom”. படத்தை பிரபலப்படுத்த பெண்கள் மட்டுமே கலந்துக் கொண்ட பைக் அணிவகுப்பு மும்பை நகரில் நடைபெற்றது. முகத்தில் வேனம் முக கவசம் அணிந்த இந்தப் பெண்கள் படத்தை பிரபலப்படுத்தும் பதாகைகள், டிசர்ட்டுகளுடன் காட்சியளித்தனர். பைக்குகளில் அவர்கள் சீறிப்பாய்ந்து மும்பையின் வீதிகளில் வலம்வந்தனர் .

மாருதி சுசூகி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னையில் கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. கிண்டியில் மாருதி சுசூகி நிறுவனத்திற்குச் சொந்தமான ஷோரூம் உள்ளது. இதன்பின்புறம் கார் உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் சர்வீஸ் மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. நேற்று இரவு 10.15 மணியளவில் ஷோரூம் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஐ.எம்.எப்.தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்

பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய 46 வயதான கீதா கோபிநாத் ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார நிபுணர் ஆப்ஸ்பெல்ட் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்தியரான ரகுராம் ராஜன் இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற கீதா கோபிநாத் தற்போது கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

அலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்

போர்ச்சுகல் நாட்டின் நசாரே கடல்பகுதியில் நடைபெற்ற அலை சறுக்குப் போட்டியில் (Surfing) உலக சாதனையை பிரேசிலைச் சேர்ந்த 31 வயதான பெண் மாயா கேபிரியா (Maya Gabeira) முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 68 அடி உயரமான அலைக்கு நடுவே அவர் பாய்ந்தோடி வந்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட இந்த சாதனையை அங்கீகரிப்பதாக கின்னஸ் நிறுவனம் மாயா கேபிரியாவுக்கு தெரிவித்துள்ளது.

வரும் 31-ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும்?

ஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என  எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

மகாத்மா காந்தி இதய துடிப்பை கேட்க வேண்டுமா?

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது இதயத் துடிப்பை மக்கள் கேட்பதற்கான ஏற்பட்டை டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியக  நிர்வாகம் செய்துள்ளது. நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகம் சார்பில் சிறப்பு  புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘அகிம்சை மற்றும் உலக அமைதி’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இது குறித்து அருங்காட்சியக இயக்குநர் ஏ. அண்ணாமலை கூறுகையில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திஜி குறித்த ‘டிஜிட்டல் மல்டிமீடியா கிட்’ ஒன்றை வெளியிட உள்ளோம்.  இதில், காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்கள் குறித்த வீடியோ, ஆடியோ இடம் பெற்றுள்ளது. மேலும், காந்தி எழுதிய 20 புத்தகங்கள், அவரை பற்றி எழுதப்பட்ட 10 புத்தகங்கள்,  காந்தியின் சிறப்பான 100 புகைப்படங்கள், அவரது குரல் போன்றவை உள்ளன. இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த கிட் 300 ரூபாய் விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் பல்வேறு  நிலைகளில் எடுக்கப்பட்ட காந்தியின் இசிஜி,களை தொகுத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அவருடைய இதய துடிப்பை உருவாக்கி இருக்கிறோம். இதை அருங்காட்சியகம் வரும்  பார்வையாளர்கள் கேட்கலாம்” என்றார்.

மார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல விளையாட்டு வீராங்கனை

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ்  வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நிர்வாணமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. பிரபல டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் “I Touch Myself Project 2018” என்னும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக “I Touch Myself” என்ற புகழ்பெற்ற பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது மார்பகங்களை கைகளால் மறைத்தப்படி உட்கார்ந்து கொண்டு பாடலை அவர் பாடியுள்ளார்.  இது குறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால் அதை செய்ய விரும்பினேன். மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியமானது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 லட்சம் பேரும், டுவிட்டரில் 1.2 லட்சம் பேரும் பார்த்துள்ளனர்.

Watch this video

சீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷ் படம் எது என்று தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த படம் என்றால் அது வட சென்னை தான் காரணம் இந்த படத்தின் கூட்டணி தான் வெற்றிமாறன் தனுஷ் படைப்புகள் எல்லாமே மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அதோடு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லை கதையம்சம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கு எல்லா படங்களும் உலக தரத்துக்கு இருக்கும் அந்த வகையில் தற்போது இணைந்து இருக்கும் வட சென்னை படத்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வடசென்னை படத்தின் டைட்டில் போல கொஞ்சம் கரடுமுரடான படம் தனுஷ் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை மார்டன் பொண்ணாக வந்த ஆன்ட்ரியா எல்லோரின் லுக்கும் மிகவும் வித்தியாசம் படத்தின் பாடல்கள் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.அதோடு படம் உலக சினிமா தரத்துக்கு உள்ளதால், இந்த மாதம் சீனா உலக சினிமா போட்டியில் மூன்றாம் நாள் திரையிட உள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம்  தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

கனா படத்தில் சிவகார்த்திகேயன் எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை இது. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். காதலனாக தர்ஷன் நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதவும் மெக்கானிக்காக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முதன் முறையாக இதில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றம் என்றாலும் 5 காட்சிகளில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று பக்காவான சண்டைக் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ.1,146 கோடி விமான கட்டணம் பாக்கி வைத்துள்ள மத்திய அரசு

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் பயணம் செலவு குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர் இந்தியா பதிலளித்துள்ளது. குடியரசுத் தலைவர்,  குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள்.   இந்த வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாய் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், பாதுகாப்பு அமைச்சகம் 211 கோடியே 17 லட்சமும், மத்திய அமைச்சரவை  செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன 543 கோடியே 18  லட்சமும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடியே 33 லட்சமும் பாக்கி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று  முதல் ஆன்லைனில் அதற்கான பணத்தை செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.  திரையின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.  “அப்ளை ஆன்லைன்”(Apply Online) என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள்.  இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும். புது கற்றுநர் உரிமம் (New Learner Licence), புது ஓட்டுநர் உரிமம் (New Driving Licence), ஓட்டுநர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)  என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும். முதல் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு முன் கற்றுநர் உரிமம் வாங்குவது மிக அவசியம். உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்து கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தின் போலியை வாங்க இங்கேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

உயர்ந்தது மானிய விலையில் வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் விலை

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் காஸ் விலையை நிர்ணயிக்கின்றன. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில், டெல்லியில் மானிய சிலிண்டர் விலை 1.49 ரூபாய் அதிகரித்து 498.02 ரூபாயாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமற்ற சிலிண்டர் விலை 30.50 ரூபாய் அதிகரித்து 829 ரூபாய் ஆகியுள்ளது. இதற்கேற்ப சென்னையிலும் விலை உயரும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியம் வழங்கப்படுவதால், சமையல் சிலிண்டர் காஸ் விலையுயர்வு பாதிக்காது. வர்த்தக சிலிண்டர் உயரும் பட்சத்தில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த ஜூனில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் விலை சென்னையில் 2.42 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 481.84 ரூபாயாகவும், டெல்லியில் 493.55 ரூபாயாகவும் இருந்தது. ஜூலையில் மானிய சிலிண்டர் டெல்லியில் 2.71 ரூபாயும், சென்னையில் 2.83 ரூபாயும் அதிகரித்தது. மானியமில்லா சிலிண்டர் 58 ரூபாய் அதிகரித்து 770.50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் டெல்லியில் 1.76 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையிலும் ரஜினியை முதல்வராக பார்க்க தயங்கும் பிரபல டிவி

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் காரணம் வசூல் மன்னன் என்பதால் அதை இந்த வயதிலும் செய்து காட்டி வருகிறார். அதனால் இன்னும் அவரின் மாஸ் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுகிறது.   ரஜினியின் திரையுலக வாழ்க்கையின் கடைசி படமாக அமையப்போகும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போவதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடை பெற்று வருவதாக தெரிகிறது.  இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய தலைமுறை வான்டேஜ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களின் விலை 2.95 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை) இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள ஆஸ்டன் மார்டின் டீலர்கள் 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் கார்களின் விற்பனையை செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க : Autonews360

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வழக்காடுவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.  அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு பணியில் உள்ள ஒருவர், மற்றொரு பணியில் ஈடுபடக் கூடாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14 வது விதியை மீறும் நடவடிக்கை என்றும் அவர் முறையிட்டுள்ளார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

தமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு?…. முழு விபரம்

கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இன்று வரை ஓயாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜூலை 30-தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் உயர்ந்தது. அதை தொடர்ந்து ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனையானது.

மேலும் படிக்க : Autonews360

கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கு : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும்,  அரசியலில் குற்றப் பின்னணி  உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டீசரை விமர்சனம் ஏன்?

நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திலேயே இந்த டீசர் 35 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு அறிமுக நடிகருக்கு இந்த அளவிலான வரவேற்பு அதிகம்தான். இருப்பினும் வர்மா டீசரில் துருவ் நடிப்பைப் பற்றி சிலர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு முதல் பட அறிமுக நடிகர் மீது இவ்வளவு வன்மத்துடன் சிலர் விமர்சனங்களை வைப்பது ஏன் என்று தெரியவில்லை.

பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணி சூப்பர் 4 போட்டியில் இதுவரை வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு அணிகள் இடையேயும் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்; விலை ரூ.15.20 லட்சம்

சிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில் புதிய மோடோGP களுடன் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் அதிநவீன சஸ்பென்ஷன் அமைப்பு இல்லை என்ற போதிலும் சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய பிற காம்போனேட்களும் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
இந்த விழாகாலத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வெர்சன் மோட்டார் சைக்கிள்களாக வெளி வந்துள்ள டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 15.20 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க : Autonews360

2ம் உலகப்போரின் போது பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜெர்மனியின் ஒதுக்குப்புற நகரமான துய்ஸ்பர்க்  என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்குள் சென்று பார்த்தபோது அதில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகள் இருப்பது தெரியவந்தது. 2ம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் படையெடுப்பைத் தடுக்கும் வகையில் இந்தச் சுரங்கத்தில் ஹிட்லரின் நாஸி படையினர் துப்பாக்சிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வார்கள் தெரிவித்துள்ளன.

லோனில் வாழ்க்கை ஓட்டுவதில் தமிழகம், மகாராஷ்டிரா ‘டாப்’

தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ரூ.2,77,400 கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ரூ.21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார்

காவேரிப்பட்டிணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார். உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர்  இன்று காலை உயிரிழந்தார். இவர் 1996 முதல் 2001 வரை காவேரிப்பட்டிணம் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து விற்பனை செயப்படுகிறது

மருத்துவமனையில் பெண்ணுக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை

ஒடிஷா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவுரான் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது வழக்கம் போல் மின்தடை ஏற்பட்டதால் மருத்துவரும், செவிலியர்களும் மெழுகுவர்த்தி மற்றும் செல்போனில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்தனர்.

யமஹா மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 350க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் தொழிற்சங்கம் ஆரம்பிக்க தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுக்கவே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இணை ஆணையர் நான்கு நாள்களாக அழைத்தும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை, தொழிற்சாலை நிர்வாகத்தின் அச்சுறுத்தலையும் மீறி கலந்து கொள்ள சென்ற 2 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தொடர்ந்து 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு எந்திரங்கள்

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்குச் சீட்டுக்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கும் தேர்தலுக்காக அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்காக 200 அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.