டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்

TNPSC Group 1 Exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் இதுகுறித்த தகவலை கேட்டுப் பெறலாம். இலவச கோச்சிங் நிபுணர்களால் நடத்தப்படும் என்றார்.