‘சர்கார்’ விநியோக உரிமையில் சாதனை

சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.. ராமநாதபுரம் பகுதிக்கான சர்கார் திரைப்பட விநியோக உரிமையில் கிடைத்த வசூல், வேறு எந்த பிரபல நடிகர்களின் படமும் செய்யாத அளவிற்கு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு

ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது என்று சசிக்குமார் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சோமசுந்தரம், சனந்த் செட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் படத்தில் இணைந்துள்ளார் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் சசிக்குமார், “ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எனது நன்றி”என்று கூறியுள்ளார்.

தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரச்சனை ஊழல்தான். ஊழலை ஒழிப்பதுதான் இங்கு கடினம். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார். விஜய் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது அவர் சொன்னப்படி ஊழலுக்கு எதிராக என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டால் கண்டிப்பாக சகோதர மனப்பான்மையுடன் வரவேற்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ’சர்கார்’படக்குழுவினருக்கு கடும் எச்சரிக்கை!

விஜய்யின் 62வது படமான சர்கார். மிகப்பெரும் பொருட்செலவில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தநிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார் “சர்கார் படக்குழுவினர் கவனத்துக்கு.. சர்கார் படம் உருவாக பலரும் தங்களது கடின உழைப்பைச் செலுத்தியுள்ளனர். இருந்தாலும், சில ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பல பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். வரும் காலத்தில் எங்களது அனுமதியின்றி இதுபோல பேட்டிகளைக் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.

விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை” – தமிழிசை

சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரல் ஆகியுள்ளது. அவரது அரசியல் பேச்சு பல அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் கூறிய கருத்துக்கெல்லாம் பதில் கூறி அவர் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

`பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் ரிலீஸ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இதில் ரஜினியுடன் த்ரிஷா சிம்ரன் மற்றும் பாபிசிம்ஹா நடிக்கின்றனர் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். இந்நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேப்டன் பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, சமீபத்தில் இவரின் வில்லன் நடிப்பில் வெளிவந்த சாமி 2 இவருக்கு மிக பெரிய நல்ல பெயரை வாங்கி கொடுத்தது தற்போது ரஜினியின் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

சர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை?

‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை தற்போது ‘பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. அதனால் தான் கலந்துகொள்ள முடியவில்லை என்று ரஜினி தரப்பினர் கூறுகிறார்கள்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பாடல்களை வெளியிட்ட இணையதளம்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று  மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட்டை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. அந்த ட்வீட் வெளியான வேகத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். சர்கார் பாடல்கள் வெளியான சிறிது நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது. இதையடுத்து மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த 5 பாடல்களும் வெளியிடப்பட்டன.

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”. இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.

எஸ்ஜெ சூர்யா புதுமையான வேடத்தில் நடிக்கும் “மான்ஸ்டர்”

மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்ஜெ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “மான்ஸ்டர்” திரைப்படத்தை தயாரிக்கிறது. இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். எஸ்ஜெ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “மான்ஸ்டர்” குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் எஸ்ஜெ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

“சர்க்கார்” விஜயிடம் பாராட்டு பெற்ற “பரியேறும் பெருமாள்”

தமிழ் சினிமாவை இன்று பட்டிதொட்டி வரைக்கும் அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் என்றால் பரியேறும் பெருமாள் படம் தான். இந்த படத்தைப் பார்த்த நடிகர் விஜய் உள்பட திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து அதிக திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த செய்தியை இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்வல் காமிக்ஸ் வேனம் படத்தை பிரபலப்படுத்த பைக் அணிவகுப்பு

சூப்பர் ஹீரோவின் சாகச காட்சிகளுடன் வெளியாகும் மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் “Venom”. படத்தை பிரபலப்படுத்த பெண்கள் மட்டுமே கலந்துக் கொண்ட பைக் அணிவகுப்பு மும்பை நகரில் நடைபெற்றது. முகத்தில் வேனம் முக கவசம் அணிந்த இந்தப் பெண்கள் படத்தை பிரபலப்படுத்தும் பதாகைகள், டிசர்ட்டுகளுடன் காட்சியளித்தனர். பைக்குகளில் அவர்கள் சீறிப்பாய்ந்து மும்பையின் வீதிகளில் வலம்வந்தனர் .

சீனா உலக சினிமா விழாவில் கலந்து கொள்ளும் தனுஷ் படம் எது என்று தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிறைந்த படம் என்றால் அது வட சென்னை தான் காரணம் இந்த படத்தின் கூட்டணி தான் வெற்றிமாறன் தனுஷ் படைப்புகள் எல்லாமே மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அதோடு வர்த்தக ரீதியாக மட்டும் இல்லை கதையம்சம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கு எல்லா படங்களும் உலக தரத்துக்கு இருக்கும் அந்த வகையில் தற்போது இணைந்து இருக்கும் வட சென்னை படத்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வடசென்னை படத்தின் டைட்டில் போல கொஞ்சம் கரடுமுரடான படம் தனுஷ் லுக் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை மார்டன் பொண்ணாக வந்த ஆன்ட்ரியா எல்லோரின் லுக்கும் மிகவும் வித்தியாசம் படத்தின் பாடல்கள் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.அதோடு படம் உலக சினிமா தரத்துக்கு உள்ளதால், இந்த மாதம் சீனா உலக சினிமா போட்டியில் மூன்றாம் நாள் திரையிட உள்ளது.

கனா படத்தில் சிவகார்த்திகேயன் எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை இது. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். காதலனாக தர்ஷன் நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதவும் மெக்கானிக்காக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முதன் முறையாக இதில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றம் என்றாலும் 5 காட்சிகளில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று பக்காவான சண்டைக் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திரையிலும் ரஜினியை முதல்வராக பார்க்க தயங்கும் பிரபல டிவி

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள். இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள் காரணம் வசூல் மன்னன் என்பதால் அதை இந்த வயதிலும் செய்து காட்டி வருகிறார். அதனால் இன்னும் அவரின் மாஸ் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் ரஜினி படத்தை தயாரிக்க சன் டிவி தயாரிக்க தயக்கம் காட்டுகிறது.   ரஜினியின் திரையுலக வாழ்க்கையின் கடைசி படமாக அமையப்போகும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போவதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவதாக கதை களம் உருவாக்க முயற்சி நடை பெற்று வருவதாக தெரிகிறது.  இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அதனால், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டீசரை விமர்சனம் ஏன்?

நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திலேயே இந்த டீசர் 35 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு அறிமுக நடிகருக்கு இந்த அளவிலான வரவேற்பு அதிகம்தான். இருப்பினும் வர்மா டீசரில் துருவ் நடிப்பைப் பற்றி சிலர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு முதல் பட அறிமுக நடிகர் மீது இவ்வளவு வன்மத்துடன் சிலர் விமர்சனங்களை வைப்பது ஏன் என்று தெரியவில்லை.

பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.