ச‌ரிவுட‌ன் தொட‌ங்‌‌‌கிய இன்றைய ப‌ங்கு‌ச் ச‌ந்தை

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி எதிரொலி இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 200 புள்ளிகள் குறைந்து 34,090 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 90 புள்ளிகள் சரிந்து 10,226 புள்ளிகளாக இருந்தது.

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது.  ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதுன் முறையாகும்.

வரும் 31-ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும்?

ஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என  எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

லோனில் வாழ்க்கை ஓட்டுவதில் தமிழகம், மகாராஷ்டிரா ‘டாப்’

தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ரூ.2,77,400 கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ரூ.21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.