பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்

தமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார். கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார். தற்போது 62 வயதை அடைந்துள்ள இவர், முயற்சியாலேயே, பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானம் என்ற பெயரை பெற்றது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் விற்பனையும் 80 சதவிகிதம் உயரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். தற்போதும் பெப்சிகோ நிறுவனத்தின் சேர்வுமனாக இருந்து வரும் நூயி, வரும் 2019 வரை போர்டு ஆஃப் டைரக்டர் ஆகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். நூயி, தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட நிலையில், தனது பணியில் வெற்றி பெற கடைபிடித்த 5 முக்கிய பழக்கங்களை பற்றி அவரே கூறியுள்ளார்.
மேலும் படிக்க

மேலும் படிக்க : Tamil32

உற்பத்தி வரி குறைப்பு – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைகிறது!

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் நாட்டு மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலை கேட்டிருந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை செயலகம், மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 245 எம்.பிக்களும் உள்ளனர்.  இதில் மக்களவை  எம்.பிக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூ. 1,584 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் ஆப் எர்த் விருது பெறுகிறார் மோடி

ஐநா.சபையின் 73வது பொதுச்சபை கூட்டத்தின் போது பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கும் சுற்றுச்சூழலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரெஸ் நேரில் விருதை வழங்க உள்ளார்.

சபரிமலையில் பெண்களுக்கென தனி வரிசை சாத்தியமில்லை – கேரள அமைச்சர்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, அங்கு பெண்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தரிசனத்துக்குப் பெண்களுக்குத் தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசனையில் அது சாத்தியமற்றது என கேரள அரசு நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பெண்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்திடக் கூடும் எனவும், அது பாதுகாப்பற்றது என்பதால் தனி வரிசை சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

வரும் நவம்பர் மாதம்  முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2014 நவம்பருக்குப் பின் வந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப்.தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்

பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய 46 வயதான கீதா கோபிநாத் ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார நிபுணர் ஆப்ஸ்பெல்ட் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்தியரான ரகுராம் ராஜன் இந்தப் பொறுப்பை வகித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற கீதா கோபிநாத் தற்போது கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

மகாத்மா காந்தி இதய துடிப்பை கேட்க வேண்டுமா?

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது இதயத் துடிப்பை மக்கள் கேட்பதற்கான ஏற்பட்டை டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியக  நிர்வாகம் செய்துள்ளது. நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகம் சார்பில் சிறப்பு  புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. ‘அகிம்சை மற்றும் உலக அமைதி’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இது குறித்து அருங்காட்சியக இயக்குநர் ஏ. அண்ணாமலை கூறுகையில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்திஜி குறித்த ‘டிஜிட்டல் மல்டிமீடியா கிட்’ ஒன்றை வெளியிட உள்ளோம்.  இதில், காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்கள் குறித்த வீடியோ, ஆடியோ இடம் பெற்றுள்ளது. மேலும், காந்தி எழுதிய 20 புத்தகங்கள், அவரை பற்றி எழுதப்பட்ட 10 புத்தகங்கள்,  காந்தியின் சிறப்பான 100 புகைப்படங்கள், அவரது குரல் போன்றவை உள்ளன. இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இந்த கிட் 300 ரூபாய் விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் பல்வேறு  நிலைகளில் எடுக்கப்பட்ட காந்தியின் இசிஜி,களை தொகுத்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அவருடைய இதய துடிப்பை உருவாக்கி இருக்கிறோம். இதை அருங்காட்சியகம் வரும்  பார்வையாளர்கள் கேட்கலாம்” என்றார்.

ரூ.1,146 கோடி விமான கட்டணம் பாக்கி வைத்துள்ள மத்திய அரசு

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் பயணம் செலவு குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர் இந்தியா பதிலளித்துள்ளது. குடியரசுத் தலைவர்,  குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள்.   இந்த வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாய் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், பாதுகாப்பு அமைச்சகம் 211 கோடியே 17 லட்சமும், மத்திய அமைச்சரவை  செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன 543 கோடியே 18  லட்சமும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடியே 33 லட்சமும் பாக்கி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று  முதல் ஆன்லைனில் அதற்கான பணத்தை செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.  திரையின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.  “அப்ளை ஆன்லைன்”(Apply Online) என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள்.  இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும். புது கற்றுநர் உரிமம் (New Learner Licence), புது ஓட்டுநர் உரிமம் (New Driving Licence), ஓட்டுநர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)  என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும். முதல் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு முன் கற்றுநர் உரிமம் வாங்குவது மிக அவசியம். உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்து கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தின் போலியை வாங்க இங்கேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

உயர்ந்தது மானிய விலையில் வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் விலை

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் காஸ் விலையை நிர்ணயிக்கின்றன. வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்கான மானியம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில், டெல்லியில் மானிய சிலிண்டர் விலை 1.49 ரூபாய் அதிகரித்து 498.02 ரூபாயாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியமற்ற சிலிண்டர் விலை 30.50 ரூபாய் அதிகரித்து 829 ரூபாய் ஆகியுள்ளது. இதற்கேற்ப சென்னையிலும் விலை உயரும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியம் வழங்கப்படுவதால், சமையல் சிலிண்டர் காஸ் விலையுயர்வு பாதிக்காது. வர்த்தக சிலிண்டர் உயரும் பட்சத்தில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த ஜூனில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய சிலிண்டர் விலை சென்னையில் 2.42 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 481.84 ரூபாயாகவும், டெல்லியில் 493.55 ரூபாயாகவும் இருந்தது. ஜூலையில் மானிய சிலிண்டர் டெல்லியில் 2.71 ரூபாயும், சென்னையில் 2.83 ரூபாயும் அதிகரித்தது. மானியமில்லா சிலிண்டர் 58 ரூபாய் அதிகரித்து 770.50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் டெல்லியில் 1.76 ரூபாய் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வழக்காடுவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.  அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு பணியில் உள்ள ஒருவர், மற்றொரு பணியில் ஈடுபடக் கூடாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14 வது விதியை மீறும் நடவடிக்கை என்றும் அவர் முறையிட்டுள்ளார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கு : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும்,  அரசியலில் குற்றப் பின்னணி  உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு எந்திரங்கள்

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்குச் சீட்டுக்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கும் தேர்தலுக்காக அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்காக 200 அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.