Tamil Nadu Budget 2019 – Live

Tamil Nadu Budget 2019-20 Live Updates

Tamil Nadu Budget 2019 Live Update: தமிழக அரசின், 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்:

Feb 8, 2019 11:55 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- வேலைவாய்ப்பு

2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தினால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:35 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- சாலை மற்றும் ரயில்வே பணிகள்

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சென்னை கோவை மற்றும் மதுரையில்500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஜெர்மனியின் கடனுதவியுடன் 12000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:25 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- பள்ளிக்கல்வித்துறை

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டில்மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:22 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மாற்றுத் திறனாளிகள் நலன்

2019 மற்றும் 2020 ஆம் நிதி ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தமிழக பட்ஜெட்டில்
மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Feb 8, 2019 11:18 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- சாலை மற்றும் ரயில்வே பணிகள்.

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில்
ரூபாய் 1142 கோடியில் 1986 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரூபாய் 726 கோடியில் 256 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Feb 8, 2019 11:15 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- குப்பையில் இருந்து மின்சாரம்.

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:11 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019 – கரும்பு மற்றும் நெல் உற்பத்தி.

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800- க்கும் சன்ன ரக நெல் ரூபாய் 1840- க்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:08 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மதுபான கடைகள் குறைப்பு

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் சில்லறை மதுபான கடைகள் 7896 ல் இருந்து 5198 ஆக குறைக்கப்படும் என்றும் வரும் நிதியாண்டில் மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாய் 96 ஆயிரத்து 177 கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:04 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மீன் பிடிப்புக்கான அம்சம்

2019 மற்றும் 2020 ஆம்நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தினால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக 80 குழுக்களுக்கு நேவி தகவல் கருவி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 11:02 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- விலையில்லா ஆடு வழங்கும் திட்டம்

2019 மற்றும் 2020ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Feb 8, 2019 11:00 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019 – பயிர்க்கடன் ஒதுக்கீடு

2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்
நடப்பு நிதி ஆண்டில் ரூ 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

Feb 8, 2019 10:58 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019 – அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு

தாக்கல் செய்யப்பட்டு வரும் 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக ரூபாய் 55399 கோடியும் ஓய்வூதிய பலன்களுக்காக ரூபாய் 29627 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Feb 8, 2019 10:53 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- அப்துல் கலாம் பெயரில் கல்லூரி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல கலாமின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 8, 2019 10:53 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Feb 8, 2019 10:53 AM
Tamil Nadu Budget 2019-20 Live Updates: தமிழக பட்ஜெட் 2019- 20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்

2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது

Tamil Nadu Budget 2019-20 Live Updates – தமிழக பட்ஜெட் 2019