ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர் . ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

2018 அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். இவர்களுக்கு நடந்த அநீதிகளை ஐநா  வரை கொண்டு சென்றார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக  நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பறவைக்கு 3-டி செயற்கை அலகு

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், ஹார்ன் பில் என்னும் பெரிய அலகு கொண்ட பறவைக்கு புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்ட பின் அதற்கு 3-டி தொழில்நுட்பத்தாலான செயற்கை அலகு பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஜுராங் பறவைகள் பூங்காவில் இருக்கும் அந்த 22 வயது வண்ணப்பறவைக்கு 8 செ.மீ நீளத்தில் புற்று நோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர். சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் அகற்றப்பட்டன. ஒரு முழு 3-டி அலகு ஜேரிக்காக உருவாக்கப்பட்டது.

இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவி அளித்தது கூகிள்

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவிகளை கூகிள் நிறுவனம் நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ப்ளிழ்யான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்தோனேசியா நிவாரண உதவிகளுக்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்றார்.

2ம் உலகப்போரின் போது பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜெர்மனியின் ஒதுக்குப்புற நகரமான துய்ஸ்பர்க்  என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்குள் சென்று பார்த்தபோது அதில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகள் இருப்பது தெரியவந்தது. 2ம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் படையெடுப்பைத் தடுக்கும் வகையில் இந்தச் சுரங்கத்தில் ஹிட்லரின் நாஸி படையினர் துப்பாக்சிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வார்கள் தெரிவித்துள்ளன.