பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செளத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலத்துடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

கிங் கோலி 24வது சதம் அடித்து சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிங் கோலி தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டனாக கோலி அடித்த 17வது சதம் இதுவாகும். இந்திய அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கின் 23 டெஸ்ட் சத சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

அறிமுக டெஸ்ட்டிலேயே மிரட்டல் சதம் விளாசினார் பிரித்வி ஷா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்தார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா அட்டகாசமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை புரிந்துள்ளார் பிரித்வி ஷா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி (102), புஜாரா (67) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். வழக்கமாக தொடக்க வீரர்களாக விளையாடும் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் இப்போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளதால், யார் முதலில் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர்கள்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசுக்கு தவறான வகையில் அவுட் கொடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள், ஹேக் செய்துள்ளனர். இணையதளத்தின் முகப்பில் லிட்டன் தாஸ், ஸ்டம்பிங் செய்யப்படும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர். அதில், லிட்டன் தாசின் கால்கள், சரியாக கோட்டில் இருக்கும் போது அவுட் கொடுத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால் ஒவ்வொரு முறையும் இணையதளம் முடக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்

போர்ச்சுகல் நாட்டின் நசாரே கடல்பகுதியில் நடைபெற்ற அலை சறுக்குப் போட்டியில் (Surfing) உலக சாதனையை பிரேசிலைச் சேர்ந்த 31 வயதான பெண் மாயா கேபிரியா (Maya Gabeira) முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 68 அடி உயரமான அலைக்கு நடுவே அவர் பாய்ந்தோடி வந்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட இந்த சாதனையை அங்கீகரிப்பதாக கின்னஸ் நிறுவனம் மாயா கேபிரியாவுக்கு தெரிவித்துள்ளது.

மார்பக புற்று நோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல விளையாட்டு வீராங்கனை

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ்  வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நிர்வாணமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. பிரபல டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் “I Touch Myself Project 2018” என்னும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக “I Touch Myself” என்ற புகழ்பெற்ற பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது மார்பகங்களை கைகளால் மறைத்தப்படி உட்கார்ந்து கொண்டு பாடலை அவர் பாடியுள்ளார்.  இது குறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால் அதை செய்ய விரும்பினேன். மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியமானது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 லட்சம் பேரும், டுவிட்டரில் 1.2 லட்சம் பேரும் பார்த்துள்ளனர்.

Watch this video

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணி சூப்பர் 4 போட்டியில் இதுவரை வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு அணிகள் இடையேயும் நடைபெறும் இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.