தொகுதி பங்கீட்டில் இழுபறியா ?

BJP-AIADMK alliances

மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார், அது ஒருபக்கம் இருந்தாலும் திரைக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியே கூட்டணியோடு தான் தேர்தலில் ஈடுபட உள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் தேர்தலை அணுக இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எளிதில் நிறைவு பெறாததற்கு, தொகுதி பங்கீடும் ஒரு இடையூறாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, முந்தைய தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாததனால் கூட்டணியே முறிவடைந்துள்ளது. எடுத்துகாட்டாக 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்தை நல்ல முடிவு எட்டப்பட்டாலும் தொகுதிகள் குறைவு என்பதற்காக வெளியேறிய தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியோடு இணைத்து கொண்டது. அதே நிலைதான் தமிழகத்திலும் நிலவுவது போல் தெரிகிறது.

திமுக பொருத்தவரை இம்முறை மெகா கூட்டணி அமையும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது.. அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினாலும் பாஜகவுடனான கூட்டணிக்கே அதிக வாய்ப்பு என்பதை அரசியல் நிகழ்வுகள் தெரியப்படுத்துகிறது

இன்னும் சில

தமிழக கட்சிகளில் இன்னும் சில கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ் மேலும் சில உள்ளூர் கட்சிகளும் முடிவை அறிவிக்காமல் இருக்கின்றன.

எங்களுக்கு இந்த தொகுதி

பொதுவாகவே தொகுதி பங்கீட்டில ”’எத்தனை தொகுதி” என்பதை விட ”எந்த தொகுதி” என்பதே சலசலப்பை ஏற்படுத்தும், சில கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வரவேற்பு இருக்கும், ஆகையால் அவர்கள் அங்கே போட்டியிட நிர்பந்திப்பது வழக்கம், அதற்கு கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறுகிய காலத்தில் தலைதூக்கும், இதனை சமாளித்து தேர்தலை சந்திப்பது எளிதல்ல.

தற்போதைய நிலையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் தான் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

யார் யாருடன் கூட்டணி ! இன்னும் சில தினங்களில் !