Sonia Gandhi

சிதம்பரம் தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

DMK-Congress Alliances: திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தருணத்தில் யாருக்கு எந்த தொகுதி என்ற ஆலோசனையும் துவங்கியுள்ளது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை பல மாதங்களுக்கு முன்னதாகவே திருமாவளவன் கேட்டு வருகிறார். மேலும் 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களிலும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. திமுக தலைமை யாருக்கு அந்த தொகுதியை ஒதுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே எனது ஆதரவு தமிமுன் அன்சாரி பேச்சு

Election 2019: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை தேர்தலில் பாமகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு காங்கிரஸ் கூட்டணிக்கு எனவும் மதச்சார்பற்ற அணிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.