India News

அயோத்தியில் ராமர் கோவில்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான எங்களது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ராமர்கோவில் இருந்த அதே இடத்தில் மீண்டும் கோவில் கட்ட வேண்டும் என மத்தியில் ஆளும் பாஜக அரசு உறுதியாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறினார்.

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியது

IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது அதேபோல் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதேபோல் சற்று நேரத்திற்கு முன்பாகவே எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை வரவேற்பதற்காக பஞ்சாப் எல்லையில் இந்திய மக்கள் தேசியக் கொடியோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பினார் அபிநந்தன்

Abhinandan Return India: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் இந்தியா வந்தடைந்தார். இது இந்தியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. வாகா எல்லை பகுதிக்கு அபிநந்தன் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்

Wing Commander Abhinandan: இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

IAF Pilot: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். அதன் பின்னர் நாளை விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் இது இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்

PM Modi: இந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் விமானி அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்

IAF Pilot: பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய தூதரக அதிகாரி நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலகோட் இந்திய விமானப்படை தாக்குதல்

IAF strikes Pakistan: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மரணமைடைந்தனர். இந்த நிகழ்வு நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை இந்திய இராணுவம் தகர்த்துள்ளது சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தக்க பதிலடி தந்த இந்திய விமானப்படை.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தவறு செய்தவர்கள் நிச்சயம் பதில் சொல்ல நேரிடும் என கூறியிருந்தார். இந்தியா சார்பாக பதிலடி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இந்திய விமானப்படை.

தாக்குதல் நடந்தது எப்படி?

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தகர்த்தது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆயிரம் கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆறு குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாக தெரிகிறது. தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் ஆறுதல்

இந்த நிகழ்வு கடந்த வாரம் மரணமடைந்த 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இது ஆறுதலாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானபடைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா மீது கைவைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எதிரிகளை எச்சரிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

அடுத்து என்ன ?

முதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்திய இராணுவத்தை தாக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை அந்நாட்டு தீவிரவாத அமைப்பை தாக்கியது. இதோடு நிற்குமா அல்லது மாறி மாறி தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களை பொருத்தவரை சுமூகமான சூழல் தான் தேவை.

இரு நாட்டு போரில் இந்தியா வெற்றி என்ற செய்தியை விட இந்தியாவில் அமைதியான சூழல் நிலவுகிறது என்ற செய்திதான் மகிழ்ச்சியை தரும். மேலும் சில கட்சிகள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது என்பதே மக்களின் ஒருமித்த கருத்து.

அரவிந்த் கெஜ்ரிவால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரதம்

New Delhi: டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு அரசின் தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களை தூண்டிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. நீண்ட சமரசத்திற்கு பிறகு போராட்டம் திரும்பப் பெறப்பெற்றது .இந்நிலையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து

Bengaluru: பெங்களூரில் எலகங்கா பகுதியில் நடைபெற்று வந்த விமான கண்காட்சியின் பொழுது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 300 கார்கள் எரிந்து நாசமாகின. சரியாக அணைக்கப்படாமல் கீழே எறியப்பட்ட சிகரெட்டிலிருந்து தீ பரவியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிர் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65%

EPFO: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி வழங்க இ.பி.எப் நிறுவனத்தின் அறங்காவலர் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர் எனக் குறிப்பிட்டார். இந்த ஒப்புதலை மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இனி பாகிஸ்தானிற்கு தண்ணீர் இல்லை

India: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, “ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட மூன்று நதிகள் வழி பாகிஸ்தானிற்கு இந்தியா வழங்கி வரும் சிந்து நதி நீர் நிறுத்தப்படும் என்றும் அந்த தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து இந்தியாவின் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க படும்” என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

RBI AnyDesk Warning: எச்சரிக்கை!! உங்கள் வங்கி கணக்கு பணத்தை அபேஸ் செய்யும் ஆப் “எனிடெஸ்க்” (AnyDesk) – ஆர்பிஐ எச்சரிக்கை.

இந்தியாவின் சென்ட்ரல் பேங்க்-காக இருந்து வரும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு அப்ளிகேஷனை நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ அனைத்து வங்கிகளுக்குமான தங்கள் சைபர் செக்யூரிட்டி மற்றும் ஐடி எக்ஸாமினேசன் செல்-க்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

இது எந்த அப்ளிகேஷன்? அதில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்…

“எனிடெஸ்க்” (AnyDesk) என்ற பெயர் கொண்ட இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆப், வங்கி வாடிக்கையாளர்களின் மொபைலில் இருந்து வங்கி கணக்கின் சேவைகளை அக்சஸ் செய்ய விடாமல், அதில் உள்ள தகவல்களை திருடி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது என்னவென்றால், உங்கள் பேங்க் அனுப்பும் OTP-ஐயும் ரீட் செய்து, உங்கள் வங்கி கணக்குகளை சில செகண்ட்களில் முழுமையாக அளித்து விடும்.

அப்பெக்ஸ் வங்கியின் அறிவுறுத்தலின் படி, UPI பயனாளர்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்களில் முழு கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், டிஜிட்டல் பேமென்ட்கள் அவசியமாகவே இருந்து வருகின்றன.

சமீபத்தில் ஒரு UPI பயனாளரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் அவரது ஸ்மார்ட் போனில் இருந்து 6.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த “எனிடெஸ்க்” (AnyDesk) அப் எப்படி வேலை செய்யும்?

இந்த ஆப்-கள் எளிதாக வேலை செய்கிறது. ஹாக்கர்கள் இந்த ஆப்-ஐ உங்கள் மொபைல் போனில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வார்கள்.

ஒரு முறை நீங்கள் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து விட்டால் ஹாக்கர்கள் 9 டிஜிட் கோடு ஒன்றை ஜெனரேட் செய்து அதன் மூலம் உங்கள் மொபைல் போனை அக்சஸ் செய்வார்கள். ஒரு முறை இது நடந்து விட்டால், உங்கள் ஸ்மார்ட்போன் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் ஹாக்கர்களுக்கு இந்த ஆப் மூலம் எளிதாக கிடைத்து விடும்.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ஒருமுறை ஹாக்கர்கள் இந்த ஆப்-ஐ உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து விட்டால், அவர்கள் உங்களிடம் இந்த ஆப்-ஐ பயன்படுத்த உங்களிடம் அனுமதி கேட்பார்கள். மேலும், உங்களுக்கு வரும் OTP-களை ஹாக்கர்கள் இடைமறித்து திருடி விடுவார்கள். OTP-யை அவர்கள் பெற்று விட்டால், அவர்கள் எளிதாக பேங்க் கணக்கை அணுக அதிக நேரம் தேவைப்படாது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

ஹாக்கர்கள் உங்கள் UPI பிளாட்பாரம் அல்லது எந்த வகையான மொபைல் வாலட்களையும் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ளவார்கள். இதுவரை இதுபோன்ற ஹாக்கர்களால் இந்தியாவில் நூறு கோடி ரூபாய் வரை திருடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பண மோசடியை எப்படி தடுப்பது?

இதுபோன்ற மோசடியை தடுக்க ஒரேவழி எனிடெஸ்க் என்ற பெயர் கொண்ட ஆப்-ஐ டவுன்லோடு செய்யாமல் இருப்பதேயாகும். ஒருவேளை நீங்கள் இதை டவுன்லோடு செய்திருந்தால், உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் மொபைல் செக்யூரிட்டியை செக் செய்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவுரையில், உண்மையில் இந்த மோசடிகளுக்கு UPI பரிமாற்றங்களே உதவியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி, ஏடிஎம் கார்டு மோசடிகளை தடுப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RBI AnyDesk Warning: ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

Pulwama Attack: இதயத்தில் நெருப்பு எரிகிறது பிரதமர் ஆவேசம்

Pulwama  Terror Attack: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அண்மையில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, என் இதயத்தில் நெருப்பு எறிவதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் பாமர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Pulwama Terror Attack: புல்வாமா தாக்குதலினால் இணையத்தில் இளைஞர்கள் கொந்தளிப்பு

Pulwama Attack: சமீபத்தில் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடந்து தீவிரவாத தாக்குதலில் தமிழகர்கள் இருவர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே கதிகலங்கியுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் பல இளைஞர்கள் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வாசகம் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் “ ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியதை பலர் வரவேற்று பதிவிடுகின்றனர்.

Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா

Pulwama Attack: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

India Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்

Pulwama Terror Attack: மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் மத்திய, மாநில கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என்று நாடே பரபரப்பான சூழ்நிலையில் இயங்கி வருகிறது.  இதனிடையே, சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பயங்கரமான தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் 2,547 பேர் 78 வாகனங்களில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியை அவர்கள் அடைந்திருந்த நிலையில் திடீரென்று 360 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய கார் ஒன்று அவர்கள் பயணித்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது குறிவைத்து மோதியது. காரில் இருந்த வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணியில் யார்?

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு 1998 ஆம் ஆண்டு மசூத் அஜார் என்பவனால் தொடங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து பாகிஸ்தானுடன்  இணைப்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கி  வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த இருபது வயதே ஆன அதில் அஹமத் தர் என்பவன் தான் நேற்று காஷ்மீரில் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியுள்ளான். இவன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இவனோடு சேர்த்து இதுவரை மூன்று பேரை இந்த அமைப்பு மூளை சலவை செய்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

இந்த நிலையில் பாதுகாப்பு படைக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தது. அதற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானிற்கு மறைமுகமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள். அதற்கு பெரிய விலையை நீங்கள் திருப்பி கொடுக்கச்செய்வோம். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த படுவார்கள்” என்று கூறினார்.

டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவை வெளியுறவுத்துறை அமைச்சர் அலுவலகம் அழைத்து தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதேபோல பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அஜய் பிசரியாவை தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபால், ரஷ்யா என உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு தங்களது ஆறுதலையும் பாகிஸ்தான் சார்ந்த அமைப்பு நிகழ்த்தியுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க “இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பால் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பற்றாக்குறைதான் காரணமா?!

2547 ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் நீண்ட பயணம் செய்தது தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ இல்லை; ஜம்மு காஷ்மீரில். அதை மனதில் கொண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பட்டிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு பற்றாக்குறையால் நிகழ்ந்தது. யாரென்றே தெரியாத ஒருவன் திடீரென்று எங்கிருந்தோ காரில் வெடிபொருட்களுடன் வந்து நேரடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறான் என்றால் அந்த இடத்தில் பாதுகாப்பு என்பது எவ்வளவு வலுவில்லாமல் இருந்திருக்கும். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று மக்களிடையே கேள்வி அலைகள் அடித்து கொண்டிருக்கிறது.

#indiaseeksjustice

நாட்டு மக்கள் அனைவரும் மொழி, மத, கட்சி, கலாச்சார சார்புகள் இன்றி ஒருமித்த குரலில் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். நம்மை தாக்கியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று.

என்ன செய்யப்போகிறது அரசு? பார்ப்போம் பொறுத்திருந்து.

India Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்.  Pulwama Terror Attack

Election Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி இடத்துக்கு தற்போது சுஷில் சந்திராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தற்போது தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும் இரண்டு தேர்தல் ஆணையர்களாக சுசில் சந்திராவும்,அசோக் ஆகியோரும் இருப்பர்.

Terror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதினான். இதில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் உட்பட 44
ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 20 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே பாதுகாப்பு படைக்கான மத்திய
அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி

நேற்று குஜராத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 17 ரூபாய் நிதியை விட அதிக நிதி வழங்குவோம்” என்று கூறினார். மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, 15 தொழில் அதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் கூறினார்.

AAP Delhi Breaking News: டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் – ஓர் சிறப்பு பார்வை

AAP Delhi Breaking News:எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மோடி அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்துவது வாடிக்கையாகி விட்டது

சில மாதங்களுக்கு முன்பு அனைத்து எதிர்கட்சிகளையும் கூட்டி பொதுக்கூட்டம் ஒன்றை ராகுல் காந்தி நடத்தினார்.

அதையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜீ 22 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் தானும் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த போவதாக கூறினார்.

அதன்படி டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மம்தாவின் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தி மு க எம் பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ம.ஜ.த தேசிய தலைவர் தேவ கவுடா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

மம்தா பானர்ஜீ பேசுகையில், “பா ஜ க ஆட்சியில் டெமோகிரசி மோடிகிரசி ஆகிவிட்டது. இன்று தான் மக்களவையில் மோடிக்கு கடைசி நாள். இன்னும் 20 நாட்கள் தான்; அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. மேற்கு வங்கத்தில் என்ன முயற்சிகள் செய்தாலும் மோடி அரசு கால்பதிக்க முடியாது. அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெல்லும்.

கண்ணாடியில் உங்களையே பாருங்கள்; ராவணனுக்கும் 56 இன்ச் மார்பு தான் இருந்தது. ஷோலே திரைப்படத்தில் தூங்கிவிடு இல்லை என்றால் கஃபர் சிங்க் வந்துவிடுவான் என்றொரு வசனம் உண்டு. இந்தியாவிற்கு மோடி தான் கஃபர் சிங். அவரை வைத்து தான் அந்த வசனம் ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தற்பொழுது சொல்லப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

ஆம் ஆத்மி டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ மோடி ஜி நீங்கள் இந்தியாவின் பிரதமர். பாகிஸ்தானிற்கு அல்ல. எந்த இந்திய பிரதமராவது டெல்லியையும் கொல்கத்தாவையும் பாதிப்பிற்குள்ளாக்க நினைப்பாரா?” என்று கூறினார்.

பரூக் அப்துல்லா பேசுகையில், “கடவுள் ராமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கு மட்டும் தான் சொந்தமானவரா? அவர் அனைவருக்கும் பொதுவானவர். உங்கள் மறைவிற்கு பின் நீங்கள் அவரிடம் செல்லும் பொழுது அவர் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் மோடி அரசுக்கு எதிராக இவ்வாறு எதிர்க்கட்சிகள் கை கோர்த்திருப்பது பா ஜ க அரசிற்கு சருக்கலாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், ரபேல் விமான கொள்முதல், விவசாயிகள் பிரச்சனை என எதிர்க்கட்சிகளின் வாயில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மோடி அரசுக்கு இது இன்னொரு பாரமே

ஆம் ஆத்மி பார்ட்டி சார்பில் டெல்லியில் டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்: AAP Mega Opposition Rally at Jantar Mantar, New Delhi – A Glance

AAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அங்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். திராவிட முன்னேற்றக் கழக சார்பில் கனிமொழி எம்பி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இது மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னோட்டமாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி

லக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார். பா.ஜ.க அரசு, தொழில் அதிபர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறிய அவர், ஏழை எளிய மக்களை ஆளும் அரசு மறந்து விட்டதாக கூறினார். மேலும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்த மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

“நாம வாழணும்னா யாரை வேணாலும் எப்போ வேணாலும் கொல்லலாம்” என்று நடிகர் அஜித் பேசிய ஒரு வசனம் மிகவும் பிரபலம். ஒற்றை வரியில் சொல்லப்போனால் அந்த வசனம் தான் PUBG Mobile கேம். யார் எங்கு இருந்து எப்பொழுது சுடுவார்கள் என்று தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தன்னையோ தன் குழுவையோ நோக்கி வரும் அத்துணை ஆபத்துகளையும் கடந்து கடைசியில் உயிருடன் நிற்க வேண்டும். எந்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த விளையாட்டின் சஸ்பென்சே இக்கால இளசுகளை கட்டி போட்டுள்ளது.

வேடிக்கைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் விளையாட ஆரம்பித்து, பிரதமர் கலந்து கொண்ட மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில்; “என் மகன் எப்போதும் pubg விளையாடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு?” என்று ஒரு மாணவனின் தாய் பிரதமரிடமே கேட்கும் அளவிற்கு நாட்டின் இள வயதினரின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த PUBG Mobile கேம்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

படிப்பு பாதிக்கப்படுவது நேரம் வீணாக்கப்படுவது போன்ற வழக்கமான பிரச்சனைகளை தவிர உளவியல் ரீதியாகவும் பல அபாயமான விளைவுகளை இந்த கேம் விளைவிக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். “அவனை கொல்லு; சுட்டு தள்ளு; கத்தியால் குத்து” போன்ற வசனங்களை இந்த கேம் விளையாடுபவர்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்கலாம். இது நாளடைவில் ஒருவரின் மனதில் மனிதாபிமானத்திற்கான இடத்தை குறைத்து வன்முறையை விதைக்கிறது.

விளையாட்டிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான கோடு மங்கிப்போகிறது. இதன் விளைவாக சுற்றி இருப்பவர்களின் மீது எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கை ஓங்குவது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற நடத்தை மாறுதல்கள் ஏற்படுகின்றன. டெல்லியில் PUBG Mobile Game விளையாட விடாமல் பெற்றோர்கள் தடுத்ததால் தன் குடும்பத்தையே கல்லூரி மாணவன் ஒருவன் கொலை செய்த செய்தி நாட்டையே உலுக்கியது.

பல கதைகளில் ஒரு கதை:

சூரஜ்(19) என்பவர் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வமில்லாத அவர் தனியே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் PUBG Mobile Game விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தெரியவந்த அவரது பெற்றோர் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் ஒருநாள் இரவோடு இரவாக தனது பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொன்றுள்ளார்.

இது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரித்த பொழுது, “இயற்கையில் சூரஜ் அமைதியான குணம் கொண்டவர் என்றும் நாளடைவில் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் அடிக்கடி அவர்களது வீட்டில் கூச்சலும் குழப்பமுமாக இருந்து வந்தது” என்றும் கூறினர்.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

இந்த விளையாட்டு கொண்டு வரும் விபரீதங்கள் பற்றி புரிந்து சீனா இந்த விளையாட்டை தடை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள முதன்மையான தனியார் கல்லூரிகளில் ஒன்றும் இந்த விளையாட்டை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரமயமாகி கொண்டிருக்கும் இவ்வுலகில் மனிதாபிமானம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது. நிஜ வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தான் விளையாட்டுகள் தோன்றின. ஆனால் தற்போது அத்தகைய ஒரு விளையாட்டே குற்றங்களுக்கான காரணியாக மாறிப்போயிருப்பது மனித மனங்கள் எவ்வளவு வலுவிழந்து போய்விட்டன என்பதை விளக்குகிறது.

ஒரு விளையாட்டிற்காக தனது சொந்தங்களையும் சுற்றத்தாரையும் ஒருவன் வெறுப்பானேயானால் அப்படி ஒரு விளையாட்டு தேவையா? யோசித்து பார்க்க வேண்டும் இளைய தலைமுறை.

PUBG Addiction Claims Danger in Student Future Life : இளைஞர்களிடம் வன்முறையை தூண்டுகிறதா PUBG?

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி!

2015 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்த பின் அவருடைய அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். எதிர் கட்சிகளின் ஒவ்வொரு செய்கையையும் விமர்சித்து சிறிது கிண்டலாக அவர் போடும் டிவீட்களும், சரமாரியாக கேட்கும் கேள்விகளும் ஊடகங்களின் பார்வையை அவர்மீது திருப்பியது. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனக்கென ஒரு ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கினர். 15 நிமிடங்களில் 5000 பேர் அவரை பின்தொடர்ந்தனர். ட்விட்டர் என்ட்ரி அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

புழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் . சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பை உடனடியாக தடுக்கா விட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

15ஆம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற பெயரில் புது ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி இதில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதனிடையே இந்த திட்டம் வரும் 15ஆம் தேதி அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் – தேவசம் போர்டு ஒப்புதல்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு சபரிமலை தேவசம் போர்டு ஒப்புக்கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும் தேவசம்போர்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நிலை கவலைக்கிடம்

கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பாரிக்கருக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார் .கடந்த 30 ஆம் தேதி மூக்கில் குழாய் மாட்டியதோடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க பட்டுள்ளார். தற்போது கோவா முதலமைச்சர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக துணை சபாநாயகர்
கூறியுள்ளார்.

சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு, ஒரு முழுப்பார்வை.

Saradha Chit Fund Scam Case: சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ சி பி ஐ அதிகாரிகளின் செயலை கண்டித்தும் மத்தியில் ஆளும் பா ஜ க அரசை எதிர்த்தும் அங்கிருக்கும் மெட்ரோ சேனல் பகுதி அருகே நேற்று முன்தினம் முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் குமாரும் அதில் பங்கேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல கட்சி தலைவர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தவாறு உள்ளனர்.

சாரதா சிட் பண்ட் விவகாரம்:

கொல்கத்தாவை சேர்ந்த சுதீப்தா சென் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் மேற்கு வங்கம் மட்டுமின்றி அசாம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். இந்த நிலையில், திடீரென்று 2013 ஆம் ஆண்டு சாரதா சிட் பண்ட் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

பொது மக்களின் பணம் 30,000 கோடி வரை சுருட்டப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில் தலைமறைவு ஆகியிருந்த சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகளில், அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சாரதா நிறுவன அதிபருக்கு பின்புலமாக திரிணாமுலின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் இருந்துள்ளனர். ராஜ்யசபாவின் திரிணாமுல் எம் பி ஜெய் போஸ், மம்தாவுக்கு விசுவாசமான முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார், மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் மதன் மித்ரா என அடுத்தடுத்து மம்தா ஆட்சியின் முக்கியமான நபர்கள் சாரதா வலையில் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் சாரதா குழுமத்தின் ஆலோசகர்களாக, நிர்வாக உறுப்பினர்களாக, பங்குதாரர்களாக இருந்து பல விதங்களில் உதவி வந்துள்ளனர்.

யார் இந்த ராஜீவ் குமார்?

2014 ஆம் ஆண்டு சி பி ஐ-க்கு மாற்றப்படும் வரை இந்த முறைகேடு சார்ந்த வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் தான் ராஜீவ் குமார். தற்போது இவர் கொல்கத்தாவின் காவல் ஆணையராக இருந்து வருகிறார். சி பி ஐ விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜீக்கு நெருக்கமானவராக வர்ணிக்கப்படும் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்ட சி பி ஐ அதிகாரிகள், அது பற்றி விசாரிக்க அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. பல முறை நேரில் வருமாறு அழைத்தும் அவர் நிராகரித்துவிட்டார். தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

Saradha Chit Fund Scam Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

இந்நிலையில்,அவரை நேரில் சென்று விசாரிப்பது என்று முடிவு செய்து சி பி ஐ அதிகாரிகள் 40 பேர்,கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்பொழுது தான் சி பி ஐ அதிகாரிகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காமல் போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஆதரவாக பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை உலகத்தரம் வாய்ந்த அதிகாரி என பாராட்டியதோடு, தனது ஆட்சியை கெடுக்க பா ஜ க திட்டம் தீட்டுவதாகவும் சாடினார்.

இதை அடுத்து, “சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜீவ் குமாருக்கு உத்தரவிடுமாறு” உச்ச நீதிமன்றத்தில் சி பி ஐ அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது .

அதே போல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிட் பண்ட் விவகாரத்தில் மேற்குவங்க மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்” அனுப்ப உயர்நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அனால் அதை சி பி ஐ மீறி நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரித்து “சி பி ஐ-க்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது.

Saradha Chit Fund Scandal: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இரண்டு நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று காலை சி பி ஐ தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்கில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை; அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Saradha Chit Fund Case: சி பி ஐ vs மம்தா அரசு – சாரதா சிட் பண்ட் முறைகேடு

சர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. அதிலிருந்து சபரிமலை தன் இயல்பு நிலையை இழந்து விட்டது. பல பெண்களின் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு இரண்டு பெண்கள் மட்டும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல பெண்கள் சென்று வந்து விட்டார்கள். இந்த விவகாரம் ஒருபுறமிருக்க, அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் கீழ் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளது.

நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி – விஜய் மல்லையா மேல்முறையீடு

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகமும் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக கூறினார். மேலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய அவர், இந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற ஓபிஎஸ் மகன்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

நரேந்திர மோடி ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன் – ஸ்ம்ரிதி இரானி

புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீங்கள் எப்போது பிரதமர் ஆவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. சிறந்த தலைவர்களின் தலைமையின் கீழ் அரசியல் பணி செய்வதே என் விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார். அவர் ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன்” என்று பி ஜே பி – எம் பி ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார்.

சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Spoiling Young Generation

Tamil Tik Tok News: சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Spoiling Young Generation

மக்களின் சமூக வலைதள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பொழுதுபோக்கிற்கு என்று ஆரம்பித்து இப்பொழுது அதற்கே அடிமை ஆகி கிடக்கிறோம். பேஸ் புக், இன்ஸ்டாகிராமிற்கு பிறகு இப்பொழுது நம்மை கட்டிப்போட்டிருப்பது டிக் டாக்.

திரைப்படங்களில் வரும் பிரபலமான வசனங்களையும் பாடல்களையும் ஒத்திசைத்து நடித்து 60 வினாடி வீடியோவாக ஷேர் செய்து மகிழ்வதோடு டிக் டாக் நின்றுவிடுவதில்லை. நம் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவிற்கு நாம் துளியும் எதிர்பார்க்காத பல விளைவுகளை அது விளைவிக்கக்கூடும்.

டிக் டாக் ஆப்-ஐ ஒருவர் பதிவிறக்கம் செய்தவுடன் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை உருவாக்காமலேயே மற்றவர்களின் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். தனக்கென ஒரு அக்கவுண்ட்டை தொடங்கியதும் மற்றவர்களின் வீடியோக்களை லைக், ஷேர் செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பவும் முடியும்.

உளவியல் ரீதியாகவே இள வயதினரில் நான்கில் மூன்று பேருக்கு சமூகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லைக் மற்றும் ஷேர்- இற்கு ஆசைப்பட்டு தங்களுக்கு முன் பின் தெரியாதவர்கள் இன்பாக்சில் மெசேஜ் செய்யும்போது அதை ஒரு உரையாடலாக எடுத்து செல்வர்.

தங்களது பர்சனல் வாழ்க்கை பற்றி பகிர்வதில் தொடங்கி அந்தரங்க விஷயங்கள் வரை அந்த உரையாடல் எங்கெங்கோ போகும். அதை எதிர்புறத்தில் பேசிக்கொண்டிருக்கும் நபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி எவரும் யோசிப்பதில்லை. பண திருட்டில் தொடங்கி உடல் முறைகேடு வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Tamil Tik Tok News: சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Spoiling Young Generation

பெண்கள் சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஆபாசமாக உடைகள் அணிந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து பகிர்வது வழக்கமாகி வருகிறது. இது அவற்றை பார்க்கும் ஆண்கள் மட்டும் அல்லாது குழந்தைகள் மத்தியிலும் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.

தங்களது குழந்தைகள்  டிக் டாக்-ஐ உபயோகிப்பது தெரிந்தால் பெற்றோர்கள் கவனமாக இருப்பது முக்கியம். அது போல பெண்களும் நேர்த்தியான முறையில் தங்களை காண்பித்துக்கொள்வதும் முக்கியம். இல்லையேல் அது பல விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பல கதைகளில் ஒரு கதை!

வியாசர்பாடியை சேர்ந்த கலையரசன் (24) என்பவர் பெண் வேடமிட்டு டிக் டாக் வீடியோக்கள்  செய்து பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அதை பார்த்த அவரது நண்பர்களும் டிக் டாக் பயனர்கள் சிலரும் அவரை திருநங்கை, அலி என்று கிண்டலடித்து அவரது மனம் புண்படும்படி விமர்சித்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறான கேலி கிண்டல்களை பொறுத்து கொள்ள முடியாமல் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்டிருந்த கடைசி டிக் டாக் வீடியோவில் “மற்றவர்களின் கேலி கிண்டலால் நான் பயப்பட போவதில்லை. ஆண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய பல டிக் டாக் வீடியோக்களையும் நான் பகிர்ந்திருக்கிறேன்.

அப்படி இருக்கையில் ஏன் நான் அவ்வப்போது பெண் வேடமிட்டு வீடியோக்கள் வெளியிட்டால் மட்டும் இரக்கமே இல்லாமல் என்னை புண்படுத்துகிறீர்கள்?! என்று கூறியிருந்தார்.

Tamil Tik Tok News: சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Spoiling Young Generation

அவரது உறவினர்களிடம் இது பற்றி விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சில நாட்களாகவே டிக் டாக் கேலி கிண்டல்களினால் அவர் மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்டதாக கூறினார்.

இது போன்று பொழுதுபோக்கிற்காக தொடங்கி; நாள் ஆகா நாள் ஆகா அதற்கே அடிமையாகி; தங்களது வாழ்க்கையை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்களின் கதைகள் பல. சமூக வலைத்தளங்களை தாண்டி வெளியில் ஒரு உலகம் இருக்கிறது.

ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பையும் நம்பிக்கையையும் சுமந்து கொண்டு குடும்பங்கள் இருக்கின்றன. ஒருவரின் திறமையையும் பிரபலத்தன்மையையும் சமூக வலைதள பின்பற்று எண்கள் என்றைக்கும் முடிவு செய்துவிட முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறை கட்டாயமாக உணர வேண்டிய காலம் இது.

Tamil Tik Tok News: சமூக சீரழிவுக்கு டிக் டோக் – Tik Tok Spoiling Young Generation

தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் சுமார் 9,000 கோடி ரூபாய்!

ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக சிறு தொகைகளை சேமிக்க தபால் நிலையங்களை பயன்படுத்துகின்றனர். இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள் ஆன கிசான் விகாஸ் பத்திரம், மாத வருவாய் திட்டம் ,தேசிய சேமிப்பு பத்திரம், PPF, RD உள்ளிட்டவைகளில் இந்த நிதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி 6 ஆம் விண்ணில் பாய்கிறது ஜீசாட்-31

பிரெஞ்சு கயானாவிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி ஜீசாட்-31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இது 40 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் விசாட் நெட்ஒர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச் டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றிற்கும் பயன்படும்.

10 கோடி பேரிடம் கருத்து கேட்கும் பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெரும் முனைப்புடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கும் தனி குழுவை அமைத்துள்ளது பாஜக தலைமை. தேர்தல் அறிக்கை தொடர்பாக 10 கோடி மக்களிடம் கருத்து கேட்ட திட்டமிட்டுள்ளனர், இதற்கு இந்தியா முழுவதும் உள்ள 4000 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள மக்களை நேரிலும் அல்லது இணையதளம் வாயிலாகவும் கருத்து கேட்ட உள்ளது பாஜக.

எங்கள் கட்சியை எதிர்க்கவே மம்தா மகாகத்பந்தன் அமைப்பை உருவாக்கியுள்ளார்: ராஜ்நாத்சிங்

மாநிலத்திற்காக செலவிடும் நேரத்தை மம்தா பானர்ஜி குறைத்து கொண்டுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள மகாகத்பந்தன் அமைப்பு பாஜகவை எதிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உலக முதலீட்டாளர்களை அழைப்பதற்காக உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது என்றார்.

கொல்கத்தா போலீசை விசாரிக்க வந்த சிபிஐ – மம்தா கண்டனம்

கொல்கத்தாவில் பண மோசடி செய்தவர்களுக்கும் காவல் ஆணையர் ராஜீவிற்கும் தொடர்புள்ளாதாக கூறி சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரிக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளனர், ஆனால் அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது, இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா, இது பாஜக அரசு செய்யும் சதி எனவும், கொல்கத்தாவில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு 73,000 நவீன ரைபிள் துப்பாக்கிகள் வாங்க இந்தியா முடிவு

எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் வழங்க இந்திய பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து ”சிக் சயர்” ரக துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த துப்பாக்கிகள் இந்தியா – சீனா இடையே உள்ள 3,600 கி.மி எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ”சிக் சயர்” துப்பாக்கிகளை தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகிறார்கள்.

புதிய சி பி ஐ இயக்குனராக ரிஷி குமார் ஷுக்லா நியமனம்

சி பி ஐ இயக்குனராக அலோக் வர்மா பதவி விலக்கப்பட்டதை அடுத்து நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குனராக டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதை அடுத்து, முன்னாள் மத்திய பிரதேச டி ஜி பி ரிஷி குமார் ஷுக்லா புது இயக்குனராக பிரதமர் தலைமையிலான குழு நேற்று நியமித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் போட்டி – ஷீலா திக்க்ஷித்

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி முறிவிற்கு பின், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது என்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் ஷெய்லா திக்க்ஷித் கூறியுள்ளார்.

இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் – மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் தாக்கூர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். ’’நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான், தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இதனை காட்டிலும் சிறப்பம்சங்களை உடையதாய் அமையும், ஏழை எளியோருக்கு பயனுள்ளதாகவும், குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்படும்’’. என்றார் பிரதமர் மோடி.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019?

தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2018-2019 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஜி எஸ் டி மற்றும் பண மதிப்பு இழப்பிற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. மோடி அரசின் நடப்பு ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி விலக்குகள்:

  • ரூபாய் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை. 3 கோடி நடுத்தர குடும்பத்தினர் இதனால் பயன்பெறுவர். 18,500 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இதனால் இழப்பு ஏற்படும்.
  • ஆண்டு வருமானத்தில் நிலையான கழிவு( ஸ்டாண்டர்ட் டிடக்ஸன்) ரூபாய் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலீடுகளுக்கான வரி விலக்குகள்:

  • ரூபாய் 6.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்திருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.
  • அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பு மூலம் வரும் வருமானத்தில் ரூபாய் 40,000 வரை வரி விளக்கு.
  • வீட்டு வாடகைகள் மூலம் பெரும் வருமானத்திற்கான வரி வரம்பு 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வீடுகளில் முதலீடு செய்யப்படும் மூலதன வரி ஆதாயம் ஒரு வீட்டில் இருந்து இரண்டு வீடுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு:

  • 2 ஹெக்டர் மற்றும் அதற்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் இத்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
  • இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கடன் வட்டியில் 2 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கால்நடை மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

தொழிலாளர்களுக்கு:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3000 ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 15,000 வருமானம் பெரும் வகையில் புதிய பிரதம மந்திரி ஷிரம் யோகி
    மந்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாதந்தோறும் ரூபாய் 100 பங்களிப்பாக செலுத்தும் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவார்கள். இதற்காக அரசு ரூபாய் 500 கோடி ஒதுக்கியுள்ளது.
  • தொழிலாளர்களுக்கான க்ராஜுவிட்டி உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இவ்வாறான சலுகைகளை மோடி அரசு வழங்கியிருப்பது தேர்தல் வெற்றிக்காக செய்யும் தந்திரம் என்று சில அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை” என்றார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019? Is the interim budget 2019 satisified the expectations of poor and middle class.

எங்களை காப்பி அடித்த மத்திய அரசு – பா.சிதம்பரம்

தற்காலிகமாக நிதிஅமைச்சர் பொறுப்பு பியுஷ் கோயல் நேற்று நடப்பு ஆண்டிற்கான இடைகால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிதிஅமைச்சர் பா.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டின் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்துள்ள பொறுப்பு நிதிஅமைச்சருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்

இடைக்கால பட்ஜெட் 2019 : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அமைச்சரவை சகாக்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜனாதிபதியையும் சந்தித்தார். தொடர்ந்து, இந்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களாக, பேட்டரி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும், 2030-ல் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை, வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, மீன்வளர்ப்புக்கு தனித்துறை அமைக்கப்படும், திரைப்பட தயாரிப்பிற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும், பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும் போன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

லேட்டாக வந்த மனைவியை செல்போனிலேயே ‘தலாக்’ என மூன்று முறை கூறி விவாகரத்து செய்த கணவர்

உத்தரபிரதேசத்தில் வசிக்கும் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண், தனது பாட்டியை பார்க்க செல்ல வேண்டும் என்று தன் கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவளது கணவர், பாட்டியை பார்க்க அரை மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து பாட்டியை பார்க்க சென்ற மனைவி, 40 நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு திரும்புயுள்ளார், தான் சொன்ன அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வரமால் லேட்டாக வந்ததால் கோபம் அடைந்த கணவர், தனது செல்போனிலேயே தனது மனைவியை ‘தலாக்’ என, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்துள்ளார்.

டிவி சேனல்களுக்கான டிராயின் புதிய கட்டண திட்டம்

டிவி சேனல்களுக்கான டிராயின் புதிய கட்டண திட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் தூர்தர்சனின் 25 சேனல் உட்பட 100 இலவச சேனல்கள் வழங்கப்பட உள்ளது. மற்ற 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் சேனல்களை முன்கூட்டியே கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்

2019 இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட்டை பியுஷ் கோயல் தாக்கல் செய்கிறார். மோடி அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன.

தேச பிதாவை துப்பாக்கியால் சுட்ட, ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்து மகா தேசிய செயலாளர்

காந்தி நினைவு நாளில் இந்து மகா தேசிய செயலாளர், சக்குன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தொடர்ந்து காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. இதை தொடர்ந்து அவர், தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகளையும் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ரயில்வே துறை அமைச்சர்

வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சரே தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், நாளைய இடைக்காலப் பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்: அன்னா ஹசாரே

லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிராவின் அகமது நகரில் உள்ள ஹசாரேவின் சொந்த ஊரான ரலேகான் சித்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த உண்ணா விரதத்தில் பேசிய அவர், லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.

திருமண பரிசாக மோடிக்கு வாக்களிக்க கோரும் கர்நாடக தம்பதி

கர்நாடகாவின் தேவாங்கிரே பகுதியை சேர்ந்த புதுமண தம்பதி நாகராஜ் மற்றும் ரேகா ஆகியோருக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது. தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் திருமண அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனர். இந்த திருமண அழைப்பிதழில், தங்களுக்கு திருமண பரிசாக மக்களைவை தேர்தலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அறிந்த பிரதமர் மோடி, அந்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பாரத ரத்னாவை விமர்சித்த பிரபல பாடகர் மீது வழக்கு பதிவு

கடந்த 2016-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து அம்மாநிலத்தை சேர்ந்த பாடகர் ஜுபீன் கார்க் (Zubeen Garg) பாடல் பாடியுள்ளார். தற்போது அவர், குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பாடிய பாடலில், பாரத ரத்னா விருதுகளை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88 வயதில் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பெர்னாண்டஸ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இவர் கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர் என்பதுடன் தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார்.

இந்தியாவின் அதிவேகமான ரயில் ”வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ்”

நாட்டின் உருவாக்கப்பட்டுள்ள அதிக வேக ரயில் 18 ரக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டது குறித்து பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடக்கத்துடனும், இந்திய மக்கள் மீது நன்றியுடனும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை எற்றுக் கொள்கிறேன் என்று நெகிழுச்சியாக பதிவிட்டிருந்தார்.

கீழே விழுந்த புகைப்பட கலைஞருக்கு ஓடிச்சென்று உதவிய ராகுல் காந்தி, டுவிட்டரில் பாராட்டு

ஒடிசாவில் இன்று 2019 தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக தொடங்கியுள்ளார். புவனேஷ்வர் விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பின்னால் படிகள் இருப்பதை பார்க்காமல் பின்னால் சென்ற வண்ணமே புகைப்படம் எடுத்தபடி, எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தார். இதை பார்த்து ராகுல் காந்தி உடனடியாக ஓடிச்சென்று அவர் தூக்கி விட்டார். அவருடைய மனிதாபிமான பணியை பாராட்டி பலரும் டுவிட்டரில் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான 272 இடங்கள் கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரிபப்ளிக் டி.வி. மற்றும் ‘சி’ ஓட்டர்ஸ், இந்தியா டுடே, ஏ.பி.பி. மற்றும் சி வோட்டர் நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பலம் மற்றும் வெற்றி பெறும் தொகுதி குறித்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளன. இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் படி, மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான இடங்கள், அதாவது 272 தொகுதிகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம் பெற உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினம்

நாளை கொண்டாடப்பட உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் முதல் முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கிறார்கள். முதன்முதலாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் இடம் பெற உள்ளது. இந்த அணி வகுப்பில் Antonov An-32, M77 A2 Ultralightweight Field Howitzer போன்ற ராணுவ விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் இந்திய ஆயுதப்படையினருக்காக ஷாங்க்நாத் உருவாக்கிய பாடல் இந்த அணிவகுப்பில் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது.

நாடு முழுவதும் அறிமுகமானது வாக்காளர் உதவி மைய இலவச உதவி எண் “1950”

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை டயல் செய்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

மனைவி கொலை செய்ய 2 நாள் லீவு கேட்ட வங்கி ஊழியர்

பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்த கிராம வங்கி மேனேஜர் முன்னா பிரசாத், தனது மனைவியை கொலை செய்ய தனக்கு விடுமுறை தருமாறு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அல்லது, மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை பார்த்து கொள்ள அதிகாரிகள் விடுப்பு அளிக்காமல் இருந்ததை தொடர்ந்தே அவர், இதுபோன்று கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெறும் 945 ரூபாயில் “கும்பாஹ் ஆப்பர்” ஐஆர்சிடிசி அறிவிப்பு

உத்திரபிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் வரும் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிற கும்பமேளாவை முன்னிட்டு, அங்கு பயணம் செய்யும் யாத்திரீகர்களுக்கு உதவும் வகையில் புதிய பேக்கேஜ் ஒன்றை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கும்பாஹ் என்ற பெயர் கொண்ட இந்த பேக்கேஜ்ஜின் படி, வெறும் 945 கட்டணத்தில் கும்பமேளாவுக்கு செல்வதுடன், உத்திரபிரதேசத்தில் உள்ள பல்வேறு புனித தளங்களுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு இன்று கூடுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது. மொத்தம் 12 பேர்களின் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2-க்கும் மேற்பட்ட குழந்தை பெற்றால் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்: ராம்தேவ் ஆலோசனை

இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பிரபல பதஞ்சலி நிறுவன தலைவர், யோகா குரு ராம்தேவ் புதன்கிழமை இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யலாம் என்ற புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார். மேலும், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமைகளை எடுத்துக் கொள்ளதுடன், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட்

ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் செயற்கைக் கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் செலுத்தப்படுகிறது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பயன்பாட்டிற்காக மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. கலாம்சாட் என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் இதனுடன் செலுத்தப்பட உள்ளது.

முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், 90 நிமிட நடன நாடகத்தை நடத்தினார் ஹேமமாலினி

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நடிகையும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான ஹேமமாலினி “மா கங்கா” என்ற 90 நிமிட நடன நாடகத்தை நடத்தினார். நதிகள் மற்றும் அவை மாசடைந்ததை கருத்தாக கொண்டு ஹேமமாலினி நடத்திய நடன, நாடகத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

5ஜி தொழில்நுட்பம் விரைவில் தயாராகி விடும்: இந்தியத் தொலைத் தொடர்பு துறை தகவல்

2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராகும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில், 5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் என மத்திய தொலைதொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் மத்தியில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுமார் 4.9 லட்சம் கோடி மதிப்பில் 8,644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

மின்னணு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை: மோடி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. ‘புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்பதை வலியுறுத்தி நடக்கும் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘சிப்’ அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறோம். அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும் என்றார்.

ரூ.140 கோடியில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய சினிமா தேசிய அருங்காட்சியத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவில் முதல் முறையாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் வரலாற்றையும் சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் நூறாண்டுகளை கடந்து வந்த இந்திய சினிமா தொடர்பான வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இன்று தொடங்கியது பிளிப்கார்ட்டின் “குடியரசு தினவிழா” சிறப்பு விற்பனை

வரும் 26ம் தேதி குடியரசு தினம் வருவதையொட்டி சிறப்பு சலுகைகளை ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை இருக்கும். இந்த சலுகை ஃப்ளிப்கார்ட் உறுப்பினர்களுக்கு மூன்று மணி நேரம் முன்னதாக கிடைக்கும். மூன்று நாட்கள் சலுகையில் ஒவ்வொரு நாளும் மதியம் 2 முதல் மாலை 6 மணி வரை சிறப்பு சலுகையும் கொடுக்கப்படும். அதில் 26% வரை தனியாக தள்ளுபடி கிடைக்கும்.

வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே இன்று மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம்

வரும் 2020-ம் ஆண்டின் ஜுன் மாதத்தில் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ். இடையே இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

கட்டணங்களை நிர்ணயித்து தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க பேச்சுவார்த்தை

சில ஆண்டுகளுக்கு முன்னர் சில ரயில் நிலையங்களில் துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய முனையங்களை உருவாக்கி, கட்டணங்களை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்து ரயில்களை இயக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று PUBG விளையாட்டு தடை செய்யப்படுமா?

சமீபகாலமாக மாணவர்களிடையே பிரபலமாகி வரும் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி, மும்பையை சேர்ந்த வாலிபர் பலியானார். ஜம்மு – காஷ்மீர் பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் தொடர்ந்து 10 நாட்கள் இந்த விளையாட்டை விளையாடி இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் என ஜம்மு ஆளுநரிடன் அம்மாநில மாணவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

எந்த கணினி-களில் IRCTC வலைதளம் இயங்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப IRCTC-யும் தனது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தனது வலைதளத்தினை மேம்படுத்தி வருகின்றது. இந்த புதுதளம் Windows XP மற்றும் Windows Server 2003 இயங்குதளங்களில் செயல்படாது என்பதால், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. தற்போதும் சில அரசு அலுவலகங்களில் Windows XP இயங்குதளம் கொண்ட கணினிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித்துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், ஆய்வு மற்றும் புதுமைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விண்வெளித்துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான இந்த ஆதரவு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூரில் உருவாக்கப்படும் என்றும்,ஏற்கெனவே திரிபுராவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பாராட்டை பெற்ற பிரதமர் மோடியின் இன்சூரன்ஸ் திட்டம்

மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் ஆனதை ஒட்டி வெளியான பத்திரிக்கைச் செய்தியை சுட்டிக் காட்டி அமைச்சர் ஜே.பி.நட்டா பதிவிட்டதை மேற்கோள் காட்டி மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சோஷியல் மீடியாவில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெறும் என்பது போன்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆண்டின் முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சந்தித்தது அந்தமான்

அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.43 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடலில் இருந்து 84 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வோல்ஸ்வேகன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் 100 கோடி ரூபாய் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விடப்பட்டுள்ளது.

வோல்ஸ்வேகன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் 100 கோடி ரூபாய் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விடப்பட்டுள்ளது. தவறினால் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த கார்களில் இருந்து வெளியாகும் அதிகபடியான நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) மூலம் ஏற்படும் புகையால் காரணமாக நுரையில் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா கோவிலில் பாரம்பரிய உடையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில், சுதேசி வழிபாடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். உள்ளூர் மக்களை கொண்டே, கோவில்களை மேம்படுத்தும் 92.22 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தின் படி, பத்மநாபசுவாமி திருக்கோவில், சபரிமலைகோவில், ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.