Indian Railways

இந்தியாவின் அதிவேகமான ரயில் ”வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ்”

நாட்டின் உருவாக்கப்பட்டுள்ள அதிக வேக ரயில் 18 ரக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

கட்டணங்களை நிர்ணயித்து தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க பேச்சுவார்த்தை

சில ஆண்டுகளுக்கு முன்னர் சில ரயில் நிலையங்களில் துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய முனையங்களை உருவாக்கி, கட்டணங்களை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்து ரயில்களை இயக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.