India

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

250 ரன்களை குவித்த இந்திய அணி

India vs Australia 2nd ODI: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது, பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மிங்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

India vs Australia 2nd ODI: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தன் 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

13000 ரன்களை குவித்து தோனி சாதனை

India vs Australia:இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் இதுவரை அவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 13000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் 13000 ரன்களை குவித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் மட்டுமே லிஸ்ட் ஏ 13000 போட்டிகளில் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியது

IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது அதேபோல் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதேபோல் சற்று நேரத்திற்கு முன்பாகவே எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை வரவேற்பதற்காக பஞ்சாப் எல்லையில் இந்திய மக்கள் தேசியக் கொடியோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பினார் அபிநந்தன்

Abhinandan Return India: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் இந்தியா வந்தடைந்தார். இது இந்தியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. வாகா எல்லை பகுதிக்கு அபிநந்தன் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்

Wing Commander Abhinandan: இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

IAF Pilot: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். அதன் பின்னர் நாளை விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் இது இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்

PM Modi: இந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் விமானி அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்

IAF Pilot: பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய தூதரக அதிகாரி நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலகோட் இந்திய விமானப்படை தாக்குதல்

IAF strikes Pakistan: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மரணமைடைந்தனர். இந்த நிகழ்வு நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை இந்திய இராணுவம் தகர்த்துள்ளது சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தக்க பதிலடி தந்த இந்திய விமானப்படை.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தவறு செய்தவர்கள் நிச்சயம் பதில் சொல்ல நேரிடும் என கூறியிருந்தார். இந்தியா சார்பாக பதிலடி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இந்திய விமானப்படை.

தாக்குதல் நடந்தது எப்படி?

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தகர்த்தது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆயிரம் கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆறு குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாக தெரிகிறது. தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் ஆறுதல்

இந்த நிகழ்வு கடந்த வாரம் மரணமடைந்த 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இது ஆறுதலாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானபடைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா மீது கைவைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எதிரிகளை எச்சரிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

அடுத்து என்ன ?

முதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்திய இராணுவத்தை தாக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை அந்நாட்டு தீவிரவாத அமைப்பை தாக்கியது. இதோடு நிற்குமா அல்லது மாறி மாறி தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களை பொருத்தவரை சுமூகமான சூழல் தான் தேவை.

இரு நாட்டு போரில் இந்தியா வெற்றி என்ற செய்தியை விட இந்தியாவில் அமைதியான சூழல் நிலவுகிறது என்ற செய்திதான் மகிழ்ச்சியை தரும். மேலும் சில கட்சிகள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது என்பதே மக்களின் ஒருமித்த கருத்து.

நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65%

EPFO: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறியுள்ளார். நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி வழங்க இ.பி.எப் நிறுவனத்தின் அறங்காவலர் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர் எனக் குறிப்பிட்டார். இந்த ஒப்புதலை மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

Pulwama Attack: இதயத்தில் நெருப்பு எரிகிறது பிரதமர் ஆவேசம்

Pulwama  Terror Attack: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அண்மையில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, என் இதயத்தில் நெருப்பு எறிவதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் பாமர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி – விஜய் மல்லையா மேல்முறையீடு

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சகமும் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இடம் பெற உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினம்

நாளை கொண்டாடப்பட உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் முதல் முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கிறார்கள். முதன்முதலாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் இடம் பெற உள்ளது. இந்த அணி வகுப்பில் Antonov An-32, M77 A2 Ultralightweight Field Howitzer போன்ற ராணுவ விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் இந்திய ஆயுதப்படையினருக்காக ஷாங்க்நாத் உருவாக்கிய பாடல் இந்த அணிவகுப்பில் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது.

நாடு முழுவதும் அறிமுகமானது வாக்காளர் உதவி மைய இலவச உதவி எண் “1950”

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை டயல் செய்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இசைஎயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடைசியாக அங்கு சென்று விளையாடிய தொடரில் இந்தியா 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து மண்ணில் விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10ல் மட்டுமே வென்றுள்ளது.

திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித்துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், ஆய்வு மற்றும் புதுமைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், திருச்சியில் தொழில்நுட்ப ஆதரவு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விண்வெளித்துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான இந்த ஆதரவு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூரில் உருவாக்கப்படும் என்றும்,ஏற்கெனவே திரிபுராவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பாராட்டை பெற்ற பிரதமர் மோடியின் இன்சூரன்ஸ் திட்டம்

மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் ஆனதை ஒட்டி வெளியான பத்திரிக்கைச் செய்தியை சுட்டிக் காட்டி அமைச்சர் ஜே.பி.நட்டா பதிவிட்டதை மேற்கோள் காட்டி மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில், 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்

மெல்பேர்னில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் முதல் முறையாக களம் இறங்க உள்ளார். இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.