India Vs New Zealand

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மாவின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாய் விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் நிறைவு பெற்ற நிலையில் 97/2

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 12 ஓவரில் 97 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்துள்ளது. இதில் ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார் தொடர்ந்து வெற்றிப் பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு 159 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 159 ரன்களை இலக்காக கொண்டு தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடரை கைப்பற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் முனைப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரண்டாவது டி20 போட்டி-வெற்றிக்கான கட்டாயத்தில் இந்தியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்திய அணி உள்ளது.

80 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்ததுதன் மூலம் டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது நியூசிலாந்து.

பத்து ஓவர் நிறைவு பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97/1

97/1 மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்ரோ குருணால் பாண்டிய வீசிய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்குப்பின் களத்திற்கு வந்த வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் செய்போர்ட் அரைச்சதத்தை கடந்து 58( 35 ) ரன்களுடன் களத்தில் உள்ளார். பத்து ஓவர் நிறைவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 97 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

நியூசிலாந்து அதிரடி ஆட்டம்

இந்தியா நியூசிலாந்து அணி முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் சற்று நேரத்திற்கு முன்பு துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 7 ஓவர் முடிவில் 74 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை கூட விடாத நிலையில் உள்ளது. தொடக்க வீரர்களான செய்போர்ட் மற்றும் முனரோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் செயபோர்ட் 24 பந்துகளில் 38 ரன்களும் முனரோ 18 பந்துகளில் 34 ரன்களை அடித்து அசத்தினார்.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, நியூசிலாந்து அணி 32 ஓவர்களில் 136/6

இந்தியா – நியூசிலாந்து கிரிகெட் அணியில் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராய்டு 90 ரன்கள் அடித்தார். 253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், பாண்டேயா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இவருக்கு பதில் தோனியை களமிறக்குங்கள்! – சுனில் கவாஸ்கர்

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வென்று 4 ஆவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. விராட், தோனி போன்ற அனுபவ வீரர்கள் அந்த போட்டிக்கான அணியில் இடம்பெறாததும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படாததுமே தோல்வியின் காரணங்களாக விமர்சிக்கப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட தோனி தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அவரது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

200 ஒரு நாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் வீராங்கனையான மிதாலி ராஜ்

இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது 200வது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். மகளிர் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் பங்கேற்கும் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகள் இடையேயான 5-வது ஒருநாள் போட்டி வரும் 3-ம் தேதி நடக்க உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 92 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச தடை விதித்தது: ஐசிசி

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே சமீபத்தில் நடந்த போட்டியில் பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு முறை குறித்து அம்பயர்கள் சந்தேகம் எழுப்பினர். இதை தொடர்ந்து 14 நாட்களுக்குள் அவரை பவுலிங் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 14 நாட்கள் காலம் முடிவடைந்த நிலையில், அவர் பவுலிங் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.

3-வது ஒருநாள் போட்டி: 18 ஓவரில் 80/1 ரன்களை இந்தியா

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோலி 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டைலர் 93 ரன்கள் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல், பாண்டேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஷிகர் தவான் தனது 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதம் அடித்தார்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி, மவுண்ட் மன்குனாய் மைதானத்தில் நடந்து வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 22 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 65 ரன்கள் கடந்தார். இது இவருடைய 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதமாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

நாளைய போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் கிரிக்கெட்: ஸ்மிரிதி மந்தனா சதத்தால் நியூசிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து – இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் நேப்பியரில் இன்று நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 48.4 ஓவரில் 192 ரன்களில் ஆல்அவுட் ஆனது. 192 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிரிதி மந்தனா 104 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி 2 ஒருநாள்; டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கவும், அவருக்கு பதிலாக இந்திய அணியை துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகள் இடையே நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றுது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர். இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்

நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இசைஎயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடைசியாக அங்கு சென்று விளையாடிய தொடரில் இந்தியா 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து மண்ணில் விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10ல் மட்டுமே வென்றுள்ளது.