DMK Alliances

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா 18 தொகுதிக்கான இடைத்தேர்தல்?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த மக்களவை தேர்தல் தேதி மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காட்டிலும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஆம் இந்த தேர்தல் முடிவு ஆட்சியை மாற்றும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.

சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம்

தமிழகத்தை பொருத்தவரை ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 சட்டமன்ற தொகுதிகளில் 118 சட்டமன்ற தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதில் செல்வி ஜெயலலிதாவின் மறைவு, மதுரை ஏ.கே போஸின் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரும் சபாநாயகர் தனபால் அவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு உயர்நீதிமன்றமும் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக குறைந்தது. அதிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர். அவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்பட முடியாத சூழலில் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதிமுக வசம் உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவையொட்டி நடைபெற்ற தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியும் கைநழுவி சென்றது.

அதிமுக வசம் உள்ள 114 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள். இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு என கூறமுடியாது. அந்த மூவரில் கருணாஸ் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு அதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மூவர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளதால் அதிமுகவின் தற்போதைய பலம் 108 இடங்கள் மட்டுமே.

திமுகவின் பலம்

திமுகவை பொருத்தவரை திரு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் திமுக ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேர் உள்ள நிலையில் திமுக வசம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆட்சி மாற்றம் வருமா?

இந்த 21 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின்னர் அதிமுக வசம் 118 தொகுதிகள் இருந்தால் மட்டுமே அதிமுக ஆட்சியை தொடரமுடியும். வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளின் முந்தைய தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்த பிறகு அதிமுக ஆட்சியை தொடர 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.

8 தொகுதிகள்…

தமிழகத்தில் அதிமுக தனது ஆட்சியை தொடர வேண்டும் என்றால் வரும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆட்சி கவிழ்வது உறுதி.

திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு?

இந்த தேர்தல் எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற 116 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை தற்போது திமுகவிடம் 96 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்தால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 18 தொகுதி மக்களின் முடிவை ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக ? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 23 ஆம் தேதி பளிச் பதிலை தரவிருக்கிறார்கள். ஒரு வேளை இரு கட்சிகளாலும் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிருபிக்க முடியாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஆக மீண்டும் தொடங்குகிறது பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம்.

சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

18 தொகுதிகளிலும் அதிமுக திமுக நேரடிப் போட்டி

அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் பதினெட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிமுக குறைந்தது பத்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும்.

18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் களமிறங்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்தபோவதில்லை, வைகோ தகவல்

Vaiko black flag protest: நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாளை சென்னை வருகிறார், அதில் அதிமுக, பாமக போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்ட மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்க்க மோடி வந்ததால் தான் மதிமுக கருப்பு கொடி காட்டியதாகவும் நாளை அவர் பிரச்சாரம் செய்யதான் வருகிறார் என்பதால் நாங்கள் கருப்பு கொடி காட்ட போவதில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ கருப்புக்கொடி போராட்டம்

Vaiko black flag protest: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமாரி வருகிறார் அவர் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவில் பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் எந்த இடத்திற்கு பிரதமர் வந்தாலும் அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டுவோம் என உறுதியாக கூறியுள்ளார் பிரதமர் வரும் போது யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை 66வது பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார் மு க ஸ்டாலின்

DMK President M.K Stalin: திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் நாளை 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் இன்று மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மார்ச் ஒன்றாம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அதோடு உங்களின் ஒருவனான என்னுடைய பிறந்த நாளும் அன்றுதான் உங்கள் பேரன்புமிக்க ஆதரவுடன் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற மக்களவைத் தொகுதிகளில் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம்

Vaiko black flag protest: தேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். சமீபத்தில் பொன்ராதாகிருஷ்ணன் யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறாம் தேதி வண்டலூர் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.

காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ள கூட்டணி ஒப்பந்தப்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம் பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.