Travel News

டிரைவரிடம் கோபமாக நடந்து கொண்டால் இனி சேவை கிடையாது: உபேர் அதிரடி

உபேர் கால் டாக்ஸி டிரைவர்களிடம் தொடர்ந்து கோபமாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் மொபைலில் இருந்து உபேர் ஆப் பிளாக் செய்யப்படும் என்று உபேர் நிறுவன தலைமை அதிகாரி பிரப்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், உபேர் கால் டாக்ஸி டிரைவர்களை, வாடிக்கையாளர்கள் திட்டுவதாகவும், மேலும் சரியான இடத்தை தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து கோபமாக நடந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் ஆப்-பை பிளாக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கோவா கடற்கரை பகுதியில் மது அருந்தினால் ரூ.2000 அபராதம்; 3 மாத சிறை

இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவாவின் கடற்கரை பகுதியை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை பகுதியில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ, பாட்டில்களை உடைத்தாலோ 2000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் அமல் செய்யப்பட உள்ளது.