45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் 6.1% ஆக உயர்வு !

Unemployment Rate At Worst In 45 Years; Rises To 6.1% In 2017-18

Unemployment Rate At Worst In 45 Years; Rises To 6.1% In 2017-18

மத்திய அரசின் தகவல் குறிப்புகளுக்கு நேர் எதிர் மறையாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

NSSO (நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ்) – இன் PLFS (பீரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே) படி இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம், 2017 – 2018 ஆம் ஆண்டுகளில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது. படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

நவம்பர் 2016-இல் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விவர சேகரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Unemployment in India 2017-2018: 45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம்

கடைசியாக இது போன்று 1972 – 1973 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி ஆட்சியின்போது வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்துள்ளது. 2012 – 2013 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2.2 விழுக்காடு குறைந்து, மறுபடியும் பா ஜ க ஆட்சியில் இப்பொழுது உச்சத்தை தொட்டுள்ளது.

2012 – 2013 ஆம் ஆண்டுகளில் 5 சதவீதமாக இருந்த கிராமப்புற ஆண்களின் வேலையின்மை, 2017 – 2018 ஆம் ஆண்டுகளில் 17.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதுபோலவே கிராமப்புற பெண்களின் வேலையின்மை 4.6 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக படித்த கிராமப்புற பெண்களின் வேலையின்மை 15.2 சதவீதத்தில் இருந்து 17.3 ஆக உயர்ந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 கோடி. இது 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட ஒரு கோடி குறைவு. தொழிலாளர் சந்தை 2018 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சிறிய முன்னேற்றம் கண்டிருந்தாலும் அதற்கு அடுத்து அக்டோபர் மாதத்தில் பெரும் சரிவை கண்டது.

NSSO-இன் இந்த ரிப்போர்ட் ஜனவரி 31 ஆம் தேதி கசிந்த நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (ஜனவரி 28 ஆம் தேதி) NSC -இன் (நேஷனல் ஸ்டாடிஸ்டிக்கல் கமிசன்) தலைவர் பி சி மோகனன் மற்றுமொரு உறுப்பினர் ஜே மீனாட்சி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வேலைவாய்ப்பு குறித்த நடப்பு (2018 – 2019) புள்ளிவிவரங்களை வெளியிட தங்கள் கமிசன் ஒப்புதல் அளித்தும், ஆளும் பா ஜ க அரசு தாமதித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள் தங்கள் கமிசனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் வருந்தினார்.

அதன்பிறகு எவ்வாறோ கசிந்த NSSO-இன் அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள் நாட்டையே உலுக்கியது. இதற்கு முந்தைய அரசுகள் ஏற்படுத்தாத அளவுக்கு தான் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றி கொண்டிருப்பதாக சொல்லிவந்த பா ஜ க

மத்திய அரசின் கூற்றுகளை தகுடுபொடி ஆக்கியது மேற்கண்ட ரிப்போர்ட்.

டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, NITI ஆயோக் (மோடி அரசால் 2015 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அரசு அமைப்பு) தலைவர் ராஜீவ் குமார், “ NSSO-வின் அந்த ரிப்போர்ட் ஒரு டிராப்ட் என்றும் இறுதி ரிப்போர்ட் வெளிவந்த பிறகே துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இப்போது கையில் இருக்கும் டிராப்ட் ரிப்போர்ட்டை 2012-2013 ஆம் ஆண்டுகளுக்கான ரிபோர்ட்டோடு ஒப்பிட்டு பார்த்து பேசுவது தவறு என்றும் கூறினார்”.

மேற்குறிப்பிட்டவாறு வேலைவாய்ப்பு குறித்த நடப்பு (2018 – 2019) புள்ளிவிவரங்களை வெளியிட மோடி அரசு தாமதித்து கொண்டே இருப்பது நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறித்து அவர்கள் கூறும் அத்தனை கூற்றுகளையும் சந்தேகத்திற்கு இடமாக்குகிறது என்றே சொல்லலாம்.

வேலைவாய்ப்புகள் குறித்த ஆய்வு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சரிக்கு சமமாக மோதும் காங்கிரஸ்-பா ஜ க கட்சிகளில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்ற கேள்விக்கான விடையின் முக்கியமான தீர்மானிப்பு காரணியாக இருக்கும்.

Unemployment in India 2017-2018: 45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம்

2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றிபெற வைத்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக நரேந்திர மோடி உத்திரவாதம் அளித்தார். ஆனால் நடந்து கொண்டிருப்பது அதற்கு எதிர்மாறாக உள்ளது. இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் அரசு பெரிய கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஊடகங்களும் வேலையின்மை பற்றி எழுதுவதை அதிகரித்து கொள்ள வேண்டும்.

தற்போதைய நாட்டின் நிலைக்கு சபரிமலை மற்றும் அயோத்தியா பற்றிய விவாதங்களை விட வேலையின்மை பற்றிய விவாதங்கள் தான் முக்கியமான தேவை என்பது மக்களின் கருத்து.

45 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் 6.1% ஆக உயர்வு ! – Unemployment Rate At Worst In 45 Years; Rises To 6.1% In 2017-18