Tamil Live News

மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

DMK Lok Sabha Election Manifesto: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் அறிக்கை இன்றே இறுதி செய்யப்பட்டு, மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தொகுதி பங்கீட்டை அறிவிக்கிறது அதிமுக

Lok Sabha Elections 2019: தமிழக மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக அதிகாரபூர்வமாக இணைத்துவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமுதிக உடன் அதிமுக தலைமை அனல் பறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி, தொகுதி பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

Pulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்

Pulwama Terror Attack : தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “காரில் 360 கிலோ வெடி பொருட்களுடன் ஒருவன் வந்து மோதும் அளவிற்கு ராணுவ வீரர்கள் பயணித்த இடத்தில் ஒரு சோதனை சாவடி கூட இல்லையா? இந்தியாவில் பாதுகாப்பு படையினருகே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் பதட்டமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.



Lok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்

Lok Sabha 2019 TMC News : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், “தமாகாவின் பலத்தை அங்கீகரிக்க கூடிய கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறினார். மேலும் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன் அனுதாபங்களை தெரிவித்த அவர், இரண்டாண்டு ஆட்சியில் அதிமுக அரசு நிறைய மக்கள் நல பணிகள் செய்துள்ளதாகவும் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக கட்சியினருக்கு உள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. தங்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்கிற பயத்தில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துவிட முயற்சி செய்து வருகிறது” என்றார்.

Lok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி – கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய திமுக எம் பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கஜா புயலால் தமிழகமே தள்ளாடிய பொழுது வராத மோடி மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இப்பொழுது திரும்ப திரும்ப வருகிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று கூறிய அவர்; திமுக சார்பில் தான் தேர்தலில் நிற்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதனிடையே அந்த ஆணையம் தங்களது மருத்துவமனைக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொள்வதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவ குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த நீதிபதிகள் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு வருகின்ற 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்திற்கு மேலும் இரண்டு தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும் இரண்டு இணை தேர்தல் அதிகாரிகளும் உள்ளது குறிப்பிடதக்கது. இவர்களது பணிகாலம் ஓராண்டாக நிர்ணயிக்கபட்டுள்ளது, பண பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை தடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது,

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் – பெரம்பூரில் தினகரன் பேசுகிறார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 24ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதில் ஏழை எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை தினகரன் வழங்குகிறார்.

புழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார் . சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பை உடனடியாக தடுக்கா விட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019

2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு

2019 மற்றும் 2020ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 2681 கோடியும் காவல்துறைக்கு 8084 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

Tamil Nadu Budget 2019: மத்திய அரசு 2018-2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில் பல அம்சங்களை கொண்டிருந்த பா ஜ க அரசின் அந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்று சிலரும்; நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி அரசு கையாண்டுள்ள தந்திரம் இது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அ தி மு க – பா ஜ க கூட்டணி குறித்த சாதகமான சூழலே நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆதலால் இதன் மீதான தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த, “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக மாற்றியது, மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூபாய் 1001 கோடி ஒதுக்கியது, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 755-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டது, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 875-ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது, வேளான் துறைக்கு 1680 கோடி ஒதுக்கியது, விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூபாய் 7000 கோடி ஒதுக்கியது” முதலிய அம்சங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

இதையடுத்து இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் விவசாய கடன் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். அதேபோல இளைஞர்களின் வேலையின்மையும் நாட்டின் விவாத பொருளாக இருந்து வருவதால் அது சார்ந்து ஏதேனும் அம்சம் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

சமீபத்திய நாட்களில் கல்வி மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் மீதான மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்த நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி மேம்பாடு சார்ந்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

முந்தைய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 10,158 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அதில் கணிசமான ஏற்றம் இருக்கலாம். அது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்து விற்பனை கடைகள் ஆகியன புதிதாக ஏற்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம்.

Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

மொத்தத்தில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அ தி மு க சந்திக்க போகும் முதல் மக்களவை தேர்தல் மிக அருகில் உள்ளது. அதில் பெறப்போகும் வெற்றி இடங்களின் எண்ணிக்கை கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சமர்பிக்கப்படப்போகும் இந்த பட்ஜெட் அ தி மு க அரசின் வெற்றி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஆளும் அரசும் உணர்ந்திருக்கும். இதை கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டின் அம்சங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்றே தோன்றுகிறது. துறைகளுக்கான நிதியும் மக்களுக்கான திட்டங்களும் போன முறையை விட இம்முறை கணிசமாக கூடியே இருக்கும். நிறைவடையா விடினும் குறை சொல்வதற்கு இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.

Tamil Nadu Budget 2019: Tamil Nadu budget for fiscal year 2019-2020 – expectations and forecasts – 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 வகுப்பிற்கும் 8 வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள்

செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார் அதுபோல 11ஆம் வகுப்பிற்க்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த அதிரடி அறிவிப்பு ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்கும் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வு வைக்கப்படும். அது பொதுவாகவே கருதப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதனால் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் இதனை கல்வியாளர்கள் வரவேற்கிறார்கள். அடிப்படை வகுப்புகளிலிருந்து நன்றாக படித்தால் நீட் தேர்வு போன்ற நுழைவுத்தேர்வுகளை எளிதில் கடந்துவிடலாம் எனக் கூறுகிறார்கள்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர்

தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அதிமுக, 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த வரை கட்சியின் நிலைபாடுகள் தொடர்பான கருத்துகளை அவர் மட்டுமே தெரிவிப்பார், அதே நிலைதான் எம்.ஜி.ஆர் காலத்திலும் இருந்தது.

ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொரு நிர்வாகிகளும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தனது சொந்த கருத்துகள் குறித்தும் வெளிப்படையாக சொல்லிவருகிறார்கள். இதற்கு காரணம் ஒற்றை தலைமை இல்லாத நிலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள், கட்சி பிளவுகளுக்கு பின்னர் இப்போது தான் கட்சி ஒன்று பட்டு செயல் படுகிறது. அதிலும் கட்சியை விட்டு பிரிந்து சென்ற சிலர் திரும்பி வராத சூழல் தான் நீடிக்கிறது.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

இந்த வேளையில் கட்சிக்காரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்க இயலாது, அப்படி அவர்கள் ஏதேனும் சொன்னால் ஜனநாயகமில்லாத கட்சி என்று அந்த கட்சி காரர்களே கருத்து கூறும் அளவிற்கு சுதந்திரமிகுந்த கட்சியாகவே திகழ்கிறது.

பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரை:

பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. இது குறித்த பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி ‘’ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் “ என்றார், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் பாஜக இம்முறை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும் எனவும் கூறியுள்ளார்.

டெல்லி தலைமை அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுவதை நம்மால் பார்க்க முடியும். ‘’ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் கூறினார். மேலும் அமைச்சர் பேசும் போது கூட்டணிக்கான வாய்ப்புள்ள தொனியில் தான் பேசிவருகிறார்கள் ஆனால் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது கூட்டணி அமையுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது:

துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சித்து வருகிறார், அவரது கட்சி தலைமை வேறாகவும், இவர் கூறும் கருத்துகள் வேறாகவும் உள்ளதால் கட்சிக்குள் சரியான புரிதல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட பட்ஜெட் பற்றி நல்லவிதமாக முதல்வரும் சில அமைச்சர்களும் கூறிய நிலையில் தம்பிதுரை இந்த பட்ஜெட் எந்த வகையிலும் தமிழகத்துக்கு பலன் அளிக்காது எனவும் இந்த பட்ஜெட் பாஜக வின் தேர்தல் அறிக்கை போல் இருப்பதாகவும் கூறினார், தம்பிதுரை கூறும் அனைத்து கருத்துகளும் அவரது சொந்த கருத்துகள் தான் எனவும் அதிமுக கட்சியின் கருத்து கிடையாது எனவும் பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நட்பும் கிடையாது கூட்டணியும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் மேகதாது, காவிரி விவகாரம், ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் கட்சி செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

கஜா புயலில் முழு இழப்பிடு தொகை தராதது குறித்தும், பட்ஜெட்டில் ஆண்டு வருவாய் ரூபாய் 5 லட்சம் மிகாமல் இருந்தால் வரி கட்ட வேண்டாம் என்பதை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. ஆனால் மாநில நலனுக்காக நாங்கள் இணக்கமான சூழலை கடைபிடிக்கிறோம் என முதல்வர் கூறி வருகிறார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரைக்கு பாஜகவோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு இல்லாத போதிலும் கட்சி பிரதிநிதிகள் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்புவது போலவும் தெரிகிறது,

அதிமுகவோடு பாஜக கூட்டணி அமையுமா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் – Tamil Nadu Deputy Speaker M Thambidurai criticise for alliance with BJP

ரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு

வருகின்ற மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அண்மையில் திருமாவளவன் ரஜினிகாந்த் ஆகியோர் திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த ரஜினி தனது படங்களில் பிசியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவோடு இணக்கமான சூழலில் இருக்கும் தருணத்தில் ரஜினி அவர்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமிர்த்தமான சந்ததிப்பு எனவே கூறப்படுகிறது.

கருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு

பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வைகோ ” தேர்தல் பிரசாரம் செய்வது அவரவர் உரிமை, ஆனால் அரசு விழாவில் மோடி பங்குகொள்ளவது ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த ஒரு பிரதமரை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் கருப்பு கொடி காட்ட வைகோ அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்க்கான 14 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பம் பெற படுகிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் அதிகம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பதே அதிர்ச்சி தகவல். அதிலும் பி.காம், பி.எஸ்.சி, எம்.காம், எம்.டெக், என்ஜீனீயர் என தெரிகிறது. அரசு வேலையில் சேரும் ஆர்வம் இன்னும் குறையவில்லை, அது தவறு அல்ல, அதற்காக துப்பரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பது வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது.

மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை பாஜக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற hashtag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று கூறும் மு க ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது இறுதி முடிவு எடுத்தவுடன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 20 தொகுதிகள் ஓதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தற்போது வரவேற்க பட்டாலும் தேர்தலில் எப்படிபட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெண் வேட்பாளரை களமிறக்கியும் வாக்கு ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.