Mithali Raj

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல தடைகளையும் அவமானங்களையும் சர்ச்சைகளையும் கடந்து ஜொலித்து வரும் இவர் பெண்களுக்கு ஒரு முன்னோடி. சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவரது ஓய்வு பற்றிய தகவல்கள் பரவிவரும் நிலையில் அது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

200 ஒரு நாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் வீராங்கனையான மிதாலி ராஜ்

இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது 200வது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். மகளிர் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் பங்கேற்கும் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.