Madurai

மதுரையில் தேவர் சமூகத்தினர் போராட்டம்

Madurai: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிப்பாளையத்தில் தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனைத்து கடைகளும் அடைக்க பட்டிருக்கும் நிலையில்அண்ணாநிலையம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

வறண்டது வைகை அணை

கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் முழு கொள்ளவை எட்டிய வைகை அணை தற்போது வறண்ட நிலையில் உள்ளது, வடகிழக்கு பருவநிலை பொய்த்து போனதால் நீர் வரத்து கணிசமாக குறைந்தது. பாசனத்திற்காக இன்று திறந்துவிடபட்டதால், அணையின் நீர் மட்டம் 52 அடியாக குறைந்தது. இப்போதே அணையில் நீர் குறைந்ததால் கோடைகாலத்தில் இன்னும் வறண்டு தணணீர் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம்: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். தமிழக நலனுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்காமல் கண்மூடித்தனமாக மதிமுக மோடியை எதிர்க்கிறது. பாரதீய ஜனதா கட்சி கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்.

தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது: முரளிதர ராவ்

மதுரை பெருங்குடி அருகே அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை பார்வையிட்ட தேசிய செயலாளர் முரளிதர ராவ்விடம், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது என்றார்.