Madurai news today

மதுரையில் தேவர் சமூகத்தினர் போராட்டம்

Madurai: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிப்பாளையத்தில் தேவர் சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனைத்து கடைகளும் அடைக்க பட்டிருக்கும் நிலையில்அண்ணாநிலையம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற ஓபிஎஸ் மகன்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தேனி திமுக கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் வாக்குசேகரிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கிராம சபை கூட்டத்தை தமிழகம் முழுதும் நடத்தி வருகிறார்கள், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்றார், அவர் பேசுவகையில் “ திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற உறுதி அளித்தார், மேலும் தற்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக சாடினார்.