Lok Sabha

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற ஓபிஎஸ் மகன்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பிரெய்லி வாக்காளர் சிலிப்

வரும் மக்களவைத் தேர்தலில் பார்வை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வாக்காளர் சிலிப் அளிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை வரும் மக்களவைத் தேர்தலிலும் அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வசதியாக அமையும்.

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.