India-Pakistan air strikes

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியது

IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது அதேபோல் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதேபோல் சற்று நேரத்திற்கு முன்பாகவே எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை வரவேற்பதற்காக பஞ்சாப் எல்லையில் இந்திய மக்கள் தேசியக் கொடியோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பினார் அபிநந்தன்

Abhinandan Return India: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் இந்தியா வந்தடைந்தார். இது இந்தியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. வாகா எல்லை பகுதிக்கு அபிநந்தன் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்

Wing Commander Abhinandan: இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

IAF Pilot: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். அதன் பின்னர் நாளை விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் இது இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்

PM Modi: இந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் விமானி அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்

IAF Pilot: பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய தூதரக அதிகாரி நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.