DMK chief M K Stalin

பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

Lok Sabha Elections 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என விமர்சித்தார். மேலும் தேர்தல் வரும் சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

தேனி திமுக கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் வாக்குசேகரிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கிராம சபை கூட்டத்தை தமிழகம் முழுதும் நடத்தி வருகிறார்கள், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்றார், அவர் பேசுவகையில் “ திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற உறுதி அளித்தார், மேலும் தற்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக சாடினார்.