Tejas Express

தேஜஸ் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி

PM Modi Flagged Off Tejas Express: பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருந்தார். அதில் குறிப்பாக தேஜஸ் ரயிலை தமிழகத்தில் முதல் முறையாக துவங்கி வைத்தார், இது இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்று. மேலும் இது முதல் கட்டமாக சென்னை முதல் மதுரை வரை இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 6 1/2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை தொடங்குகிறது

பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ICF நிறுவனம் தயாரித்துள்ள அதிவேக தேஜஸ் ரயில் சென்னை முதல் மதுரை வரை முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் 6 1/2 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரை சென்றடையும். இதில் விமானத்தில் உள்ள அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.