Tamilnadu Congress

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை

கடந்த தேர்தலில் போதிய வாக்கு சதவீதத்தை பெறாததால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி இழந்துள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின் படி குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்தால் மட்டுமே தங்கள் சின்னத்தை தக்கவைத்து கொள்ள முடியும், அதே நேரம் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிக்கு சின்னம் தேர்ந்தேடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் அந்த கட்சியின் கோரிக்கையை ஏற்று மோதிரம் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னதில் போட்டியிடும் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களது மோதிரம் சின்னமும் முடக்கப்பட்டதால் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிறது.

திருச்சி தொகுதியை பெற திருநாவுக்கரசர் முயற்சி

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் திருச்சி தொகுதியையும் எங்களுக்கே தர வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவிடம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அதில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதே தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, மிக விரைவில் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு யாருக்கு எந்த தொகுதி என்பது அறிவிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் விசிகே போட்டியா?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சின்னம் இருப்பதால் மற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் “கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்” என்றார்.

பாமகவால் அதிமுகவுக்கு பலவீனம் ஏற்படும் திருமாவளவன் கருத்து

Elections 2019 Tamil Nadu: அதிமுகவும் பாஜவும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என அனைவருமே கூறிவந்தனர், ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்தது சில பாமக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியாய் அமைந்தது, அதனால் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் தனது பதவியை ராஜினாமா செய்தனர். பாமக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளதை குறித்து கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “ பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பலவீனம் ஏற்படும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

DMK Alliances: திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது, மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதியில் என்பது குறித்த அலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் சிபிஐ கட்சியின் மாநில பொருப்பாளர் திரு. முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டது, சிபிஐ கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது. அதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.