Tamil Nadu Assembly

இன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு

கடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடுகின்றன. இன்று மதியம் நடக்க இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

தம்பிதுரை கருத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பேசுகையில் மாநில அரசின் நிதியை பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயக்குமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம்

தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர்க்கான 14 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பம் பெற படுகிறது என்ற தகவல் வெளியிடப்பட்டது. அதற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் அதிகம் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பதே அதிர்ச்சி தகவல். அதிலும் பி.காம், பி.எஸ்.சி, எம்.காம், எம்.டெக், என்ஜீனீயர் என தெரிகிறது. அரசு வேலையில் சேரும் ஆர்வம் இன்னும் குறையவில்லை, அது தவறு அல்ல, அதற்காக துப்பரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பித்திருப்பது வருத்தமளிக்கும் தகவலாக உள்ளது.