Tamil Maanila Congress

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

பாஜக

  1. கன்னியாகுமரி
  2. சிவகங்கை
  3. கோவை
  4. ராமநாதபுரம்
  5. தூத்துக்குடி

பாமக

  1. தருமபுரி
  2. விழுப்புரம்
  3. அரக்கோணம்
  4. கடலூர்
  5. மத்திய சென்னை
  6. திண்டுக்கல்
  7. ஸ்ரீபெரும்புதூர்

தேமுதிக

  1. கள்ளக்குறிச்சி
  2. திருச்சி
  3. சென்னை வடக்கு
  4. விருதுநகர்
  5. தமிழ் மாநில காங்கிரஸ்

    1. தஞ்சாவூர்
    2. புதிய தமிழகம்

      1. தென்காசி
      2. புதிய நீதி கட்சி

        1. வேலூர்
        2. என்.ஆர்.காங்கிரஸ்

          1. புதுவை

ராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பற்றி கருத்து தெரிவித்த ஜி.கே வாசன் ராகுலை விட மோடி தான் சூப்பர் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி எனவும் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான் அதற்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம் என்றார்.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்

நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.