Sasikala

வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன்

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அமமுக மூத்த நிர்வாகிகளும் டிடிவி தினகரன் அவர்களும் ஆலோசித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவின் கருத்துக்களை கேட்டறிய பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை சென்று சந்தித்தனர். பின்பு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் மிக விரைவில் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும், என்றார்.

MLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி

MLA Karunas : நான் என்றுமே சசிகலாவின் ஆதரவாளர் என்றும் தினகரன் எனக்கு சொந்தக்காரர் என்றும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார். அம்மா அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த ஆட்சியை களைக்ககூடாது என்பதை தவிர எனக்கு இந்த அரசின் மீது சிறிதும் உடன்பாடில்லை. இந்த அரசுடன் சண்டை போட்டாலும் எந்த பயனும் இல்லை, மேலும் தமிழகத்தில் மத்திய அரசினுடைய ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டது உண்மையே: உயர்மட்ட குழு ஆய்வு தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சலுகை அளிக்கப்பட்டது உண்மை என்று ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை தகவல்கள் தெரிவிகின்றன. அதில் சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் பூனைகள் நுழையாத வகையில் அறைகளுக்கு திரைச்சீலைகள் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அத்துமீறல்கள், சிறை விதிமுறை மீறல்களாக கருதப்படும் என்றும் லஞ்ச வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.