லட்சத்தீவுகள் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதன் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்தே காணப்படுவதாகக் கூறிய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த நிலை தொடரும் என குறிப்பிட்டுளள்து. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.