Rahul to visit Kanyakumari today

மோடியை கட்டித் தழுவியது ஏன்? ராகுல் விளக்கம்

சென்னை தனியார் கல்லூரியில் மாணவிகளிடையே ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மோடியை நீங்கள் கட்டித் தழுவியது ஏன் என்ற கேள்விக்கு ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமோ வெறுப்போ கிடையாது எனவும் எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு அழகான அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவே நாடாளுமன்றத்தில் அவரைக் கட்டியணைத்தேன் என ராகுல் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் ராகுல் நம்பிக்கை

கன்னியாகுமாரி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். பின்னர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். Made in China என்பதற்கு பதிலாக Made in Tamil Nadu என்ற அளவிற்கு உற்பத்தி தொழிலை தமிழகத்தை முன்னேற்றுவோம். பணக்காரர்களுக்கு கடனுதவி வழங்காமல் இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் அளிப்போம் என உறுதியளித்துள்ளார்.

சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடயே உரையாற்றவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த்துவிட்டு, கன்னியாகுமரிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கன்னியாகுமரியில் ராகுல் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள், கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கு கொள்கின்றனர். இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது, தமிழகம் முழுவதிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அங்கு செல்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.