Pon.Radhakrishnan

நாளை கருப்பு கொடி போராட்டம் நடத்தபோவதில்லை, வைகோ தகவல்

Vaiko black flag protest: நரேந்திர மோடி மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாளை சென்னை வருகிறார், அதில் அதிமுக, பாமக போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். நாளை மோடியை எதிர்த்து கருப்பு கொடி காட்ட மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்க்க மோடி வந்ததால் தான் மதிமுக கருப்பு கொடி காட்டியதாகவும் நாளை அவர் பிரச்சாரம் செய்யதான் வருகிறார் என்பதால் நாங்கள் கருப்பு கொடி காட்ட போவதில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ கருப்புக்கொடி போராட்டம்

Vaiko black flag protest: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமாரி வருகிறார் அவர் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாகர்கோவில் பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் எந்த இடத்திற்கு பிரதமர் வந்தாலும் அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டுவோம் என உறுதியாக கூறியுள்ளார் பிரதமர் வரும் போது யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ ஆவேசம்

Vaiko black flag protest: தேர்தல் வருவதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் நாங்கள் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம் என ஆவேசமாக பேசியுள்ளார். சமீபத்தில் பொன்ராதாகிருஷ்ணன் யாரும் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறாம் தேதி வண்டலூர் அருகே பாஜக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவார்கள் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi visit to Kanyakumari: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்குமுன் மதுரையிலும் திருப்பூரிலும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அதேபோல் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆறாம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பார் எனவும் தெரிகிறது.

மார்ச்சில் ஈரோடு வருகிறார் பிரதமர் மோடி

Modi in Erode: மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 6ஆம் தேதி சென்னையில் நடக்கும் மாபெரும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான அதிமுக பாமக போன்ற கட்சிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Puducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ள நாராயணசாமி அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்ணா போராட்டம் நடத்துகிறார் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வரை சந்தித்து பேச தயாராக உள்ளேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம்: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். தமிழக நலனுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்காமல் கண்மூடித்தனமாக மதிமுக மோடியை எதிர்க்கிறது. பாரதீய ஜனதா கட்சி கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்.