Lok Sabha Elections 2019 AIADMK Live Updates

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Election 2019 Latest News & Updates:  அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி