Live news in tamil

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம் – பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். “தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது; அது ஒரு ரகசியம். கூட்டணி தொடர்பான அறிவிப்பை அ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து அறிவிப்போம்” என்று துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்து திருமண சடங்குகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்து திருமண மரபுகள் பற்றி கிண்டலாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “திருமணத்தின் போது மணமக்களை தரையில் உட்கார வைத்து; அந்த மணமக்களின் கண்கள் மட்டும் அல்லாது சுற்றி இருப்பவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரும்படி தீ மூட்டி; தனக்கும் அர்த்தம் தெரியாத, வந்திருப்பவர்களுக்கும் புரியத மந்திரங்களை புரோகிதர் சொல்லிக்கொண்டு இருப்பார்” என்று கூறினார். இது இந்து மதத்தையும், மக்களின் கடவுள் நம்பிக்கையையும் அவமதிப்பது போல் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுகரசர் விடுவிக்கபட்டு புதிய தலைவராக கே.எஸ் அழகிரி என்பவர் நியக்கபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதியேற்ற பின்னர் கட்சியில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், அவரின் உழைப்பால் மூன்று மாநில தேர்தலில் வெற்றி கண்டது காங்கிரஸ். அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தலைவரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.