India vs New Zealand 2019

டி20 தொடரை கைபற்றியது நியூசிலாந்து அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைபற்றியது. இன்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 212 விளாசியது. அதிகபட்சமாக முன்றோ 72 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அனைத்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர், இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் விஜய் சங்கர் 43 ரன்கள் எடுத்திருந்தார், ஆகையால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட இந்திய அணி. தொடரிலும் தோல்வி அடைந்தது.

டி20 தொடரை வெல்ல இந்திய அணிக்கு 213 இலக்கு

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை பேட் செய்யுமாறு பணித்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டகாரர்கள் இருவருமே குல்தீப்பின் சுழலில் சுறுண்டனர். அதிகபட்சமாக முன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அணிக்கு வலிமை சேர்த்தார். இருப்பினும் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர். 20 ஓவர் நிறைவில் 212/4 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயித்தனர். கடினமான இலக்கை அடையும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி

இந்தியா – நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளில் 1 – 1 என்ற சமநிலை நீடிக்கிறது. இறுதி போட்டியையும் தொடரையும் வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு பதில் தோனியை களமிறக்குங்கள்! – சுனில் கவாஸ்கர்

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வென்று 4 ஆவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. விராட், தோனி போன்ற அனுபவ வீரர்கள் அந்த போட்டிக்கான அணியில் இடம்பெறாததும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படாததுமே தோல்வியின் காரணங்களாக விமர்சிக்கப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட தோனி தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அவரது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.