Ind vs Aus

இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

India vs Australia, 2nd T20I: இன்று பெங்களூருவில் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் நிறைவிற்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் 113 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன்மூலம் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

20 ஓவர் நிறைவில் இந்திய அணி 190/4

India vs Australia, 2nd T20I: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் விளாசியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார் கேப்டன் விராட் கோலி. மேலும் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இரண்டாவது டி20 போட்டியில் அஸ்திரேலிய அணி பந்து வீச்சு

India vs Australia, 2nd T20I: இரண்டாவது டி20யில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், விஜய் ஷங்கர், சித்தார்த் கௌல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5வது ஓவர் முடிவில் 39 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 28(17), தவான் 8(13) ரன்கள் எடுத்திருந்தனர்.

பெங்களூருவில் இன்று ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 போட்டி – ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி!!

India vs Australia, 2nd T20I: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இன்று இரண்டாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன் செய்யும் விதத்தில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.