Global Investor Meet

அரசின் பணத்தை வீணடித்ததும்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய சாதனை -ஸ்டாலின்

நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் என்பதன் மூலமே, இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை காய்ந்து வெளுத்து விட்டது என்று திமுக தலைவர் முகஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில், இரு நாட்கள் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைத்து விளம்பரம் செய்து- அரசின் பணத்தை வீணடித்ததும்தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் வெங்கைய நாயுடு

இன்று பிற்பகல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். அப்போது, முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.