எல்லா துறைகளிலும் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பது பெரும்பாலோரின் கருத்து அதனை செயல்படுத்தும் வகையில் தகவல் தொழிநுட்ப துறையில் வெளிப்படை தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு தளமாக அமைகிறது Glassdoor.

Glassdoor என்பது ஒரு நிறுவனம் எப்படி செயல்படுகிறது அங்கு ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை அந்த நிறுவனத்தில் தற்சமயம் பணிபுரியும் ஊழியர்களும் முன்னால் ஊழியர்களும் தன் கருத்துகளை வெளிபடுத்தும் ஒரு தளம், எந்த நிறுவனத்தில் பணிபுரியலாம் என்பதில் ஒரு குழப்பம் சிலருக்கும் இயல்பாகவே இருக்கும்.

ஒரு நிறுவனத்தை பற்றி அங்கு பணிபுரிபவர்ளே கருத்து சொன்னால் ஒரு தெளிவு பிறக்கும்.

இதன் வாயிலாக வேலை தேடும் இளம் பட்டதாரிகளுக்கு மிகவும் உபயோகமானதாக அமைகிறது,

  • பணிக்கு செல்லும் முன்பே அந்த நிறுவனத்தை பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நிறை குறைகளை அறிந்த பின்னர் இது தொடர்பான ஒரு முடிவை நாம் எடுக்கலாம். காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
  • அங்கு தற்சமயம் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் போன்ற தரவுகளையும் தெரிந்து கொள்ளலாம், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பம்சங்கள் என்ன? எடுத்துகாட்டாக ஒரு பெண் ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்தும் பதிவிட்டுள்ளார், இரவு நேரங்களில் போக்குவரத்து வசதிகள் குறித்து பதிவிடுவதால் அது தொடர்பான சந்தேகங்கள் நீங்கும்.
  • இளம் தலைமுறையினர் பொது தேர்வுகளை விட அதிகம் அஞ்சுவது நேர்காணலிற்கு தான். அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்த குறிப்பிட்ட நிர்வாகத்தின் நேர்காணல் எப்படி நடத்தப்படும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு நிர்வாகத்தை பற்றி கருத்து கூறுபவர்கள் நிறைவான கருத்துகளோடு சேர்த்து குறையையும் பொது வெளியில் கூறுவதால் நிர்வாகத்தின் மேல் சிலருக்கு ஒரு அவநம்பிக்கை எற்படுகிறது. அதிக அளவிலான குறைகளை பெறும் நிறுவனங்களுக்கு பணியாளர்களும் முதலீட்டாளர்களின் வருகையும் குறைகிறது. இதனால் வர்த்தக வீழ்ச்சிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு” – Glassdoor