தமிழகத்தில் இன்று மாவட்டம் தோறும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. 2019ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியே 91 லட்சம். இதில் 2.92 கோடி ஆண் வாக்காளர்கள், 2.98 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,66,515 ஆகும் என்றார்.