Congress news in Tamil Nadu

Lok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக கட்சியினருக்கு உள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. தங்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்கிற பயத்தில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துவிட முயற்சி செய்து வருகிறது” என்றார்.

மக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடன் எச் வசந்த் குமார், கே ஜெயக்குமார், எம் விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு, ஒருங்கிணைப்புக் குழு, பிரச்சாரக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக்குழு ஆகி ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது

கடந்த மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை தனித்து நின்று வென்றது அதிமுக, அதற்கு அவர்களது தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம். கச்சத்தீவில் இருந்து மீனவர் நலன், மாணவர் நலன் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றன. அதுபோல வரும் மக்களவை தேர்தலிலும் சிறப்பான வெற்றியை நோக்கி அந்த கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதற்காக குழு ஒன்றை அறிவித்துள்ளனர். அதில் மூத்த கட்சி நிர்வாகிகளான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன்,அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம், மனோஜ் பாண்டியன், மற்றும் முன்னால் எம்.பி ரவி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் ராகுல் காந்திக்கு உண்டு – திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவி விலகி புதிய தலைவராக கே எஸ் அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நன்றியை தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் சோனியா ராகுல்காந்தி தலைமையில் சேர்ந்தேன். அதன்பிறகு அகில இந்திய செயலாளராக கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைத் தந்தார். பின்னர் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக பணியாற்றக்கூடிய வாய்ப்பைக் கொடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி 30,000 பேரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளோம். 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர்களை ஏற்படுத்தியுள்ளோம். பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் ஊழலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். மக்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு தொடர்ந்து பாடுபட்டோம். என்னை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக அறிவித்தது ராகுல் காந்திதான். என்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது. என்னை மாற்றுவதற்கு முன்பே என்னிடம் தகவல் கூறப்பட்டது என்று கூறினார்.