Chennai Rains

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை – மக்கள் மகிழ்ச்சி

Chennai Rains: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து இருக்கலாமோ என கணிக்கப்படுகிறது.

Tamil Nadu Weather: லேசான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Rain: வங்காள விரிகுடாவில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி தொடரும். ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. ஆனால் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு நிலைமை மாறும் என தெரிகிறது. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுவகையில் ”லட்சதீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சூழற்சி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர் “ மேலும் நீலகிரி மாவட்ட மலை பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.