அதிமுக தேர்தல் அறிக்கை

வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை பங்கிட்டுக் கொடுத்துள்ளது. பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் இன்னும் சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கியுள்ளது. தற்போது அதிமுக கைவசம் 25 தொகுதிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதால் அவர்களுக்கும் தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது குறித்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்ததொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார். தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.