A. K. Moorthy

ஏ.கே. மூர்த்தி
துணை பொது செயலாளர் - பாட்டாளி மக்கள் கட்சி
முழுப் பெயர்ஏ.கே. மூர்த்தி
பிறந்த தேதி12 July 1964 (age 54)
பிறந்த இடம்விழுப்புரம்
கட்சி பெயர்பாமக
கல்விPost Graduate
தொழில்அரசியல்
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்பத்மினி தேவி

ஏ. கே. மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது கட்சியை ஆரம்பித்திருந்தார். ஏ.கே.மூர்த்தி தனது அரசியல் வாழ்க்கையை ஒரு சாதாரண கட்சி உறுப்பினராக தொடங்கி கட்சியின் துணை பொது செயலாளர் ஆனார். அவர் முதல் முறையாக 1999 இல் செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

ஏ. கே. மூர்த்தி 2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். ஜூலை 2ஆம் தேதி ரயில்வே இணை அமைச்சரானார். குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி இரயில்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகம் செய்தார்.