Seeman

சீமான்
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழுப் பெயர்சீமான்
பிறந்த தேதி08 Nov 1966 (வயது 52)
பிறந்த இடம்அரனையூர், சிவகங்கை
கட்சி பெயர்நாம்தமிழர் கட்சி
கல்விGraduate
தொழில்சினிமா - இயக்குநர்
தந்தை பெயர்செந்தமிழன்
தாயார் பெயர்அன்னம்மாள் செந்தமிழன்
துணைவியார் பெயர்கயல்விழி

சீமானின் வழிக்காட்டியான பாரதிராஜாவின் படங்கள் மற்றும் மணிவண்ணனின் பணியால் ஈர்க்கப்பட்டதால், திரைப்படங்களை இயக்குவதை தொழிலாக தேர்ந்தெடுத்தார். பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கி தனது திரை வாழ்க்கையை துவங்கிய சீமானின் 3 படங்களும் வெற்றிப்படங்களாக இல்லை. அதன்பிறகு திரைவாழ்க்கையில் நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டார். 2006ல் நடிகர் மாதவனை வைத்து தம்பி எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரளா, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும், மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார். 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார் . 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.