Dayanidhi Maran

தயாநிதி மாறன்
முன்னாள் மத்திய அமைச்சர் - திராவிட முன்னேற்ற கழகம்
முழுப் பெயர்தயாநிதி மாறன்
பிறந்த தேதி5 December 1966 (age 52)
பிறந்த இடம்கும்பகோணம்
கட்சி பெயர்திராவிட முன்னேற்ற கழகம்
கல்விGraduate
தொழில்அரசியல்வாதி, தொழிலதிபர்
தந்தை பெயர்முரசொலி மாறன்
தாயார் பெயர்மல்லிகா மாறன்
துணைவியார் பெயர்ப்ரியா மாறன்

தயாநிதி மாறன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.

இந்தியாவின் 2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 15 ஆவது மக்களவையில் இடம் பெற்றார்.

இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி தி.மு.க தலைவரும் தமிழகத்தின்முன்னால் முதல்வரான மு.கருணாநிதி ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.