Thirunavukkarasar

திருநாவுக்கரசர்
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்
முழுப் பெயர்சு.திருநாவுக்கரசர்
பிறந்த தேதி13 Jul 1949 (வயது 69)
பிறந்த இடம்தீயாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்விPost Graduate
தொழில்அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தந்தை பெயர்திரு. சுப்புராமன்
தாயார் பெயர்திருமதி. காளியம்மாள்
துணைவியார் பெயர்ஜெயந்தி

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான திருநாவுக்கரசர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவராக உள்ளார். இளம்வயதிலேயே தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக பணியாற்றிய இவர், 1980 முதல் 1987 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பல்வேறு துறைகளை கவனித்துவந்தார். மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து சில காலம் பணியாற்றி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்மாநில கிளையை நியூயார்க், அமெரிக்கா என சர்வதேச அளவில் துவங்கிவைக்க திருநாவுக்கரசர் அழைக்கப்பட்டார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், இவர் துவங்கிய எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்திய அரசியலில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர், தனது எளிமை மற்றும் தொலைநோக்கு பார்வையின் காரணமாக தமிழகத்தில் மிகப்பெரிய தொண்டர்படையை வைத்துள்ளார். “அக்கரை சீமையில் ஆறு வாரங்கள்” எனும் புத்தகத்தை எழுதியுள்ள திருநாவுக்கரசர், “பொன் மனம்” எனும் வார இதழை துவங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.