P. Chidambaram

பா.சிதம்பரம்
முன்னால் மத்திய அமைச்சர் - காங்கிரஸ்
முழுப் பெயர்பா.சிதம்பரம்
பிறந்த தேதி16 September 1945 (age 73 years)
பிறந்த இடம்சிவகங்கை மாவட்டம்
கட்சி பெயர்காங்கிரஸ்
கல்விMBA from Harvard Business School
தொழில்வழக்குரைஞர் / அரசியல்
தந்தை பெயர்பழனியப்பன்
தாயார் பெயர்லட்சுமி
துணைவியார் பெயர்நளினி சிதம்பரம்

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறை மத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் முறையாக மக்களவையின் உறுப்பினராகச் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைகளால் போற்றப்பட்டது.