K. Subbarayan

கே. சுப்பாராயன்
முன்னாள் மக்களைவை உறுப்பினர் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி
முழுப் பெயர்கே. சுப்பாராயன்
பிறந்த தேதி10 Aug 1947 (வயது 72)
பிறந்த இடம்திருப்பூர்
கட்சி பெயர்இந்திய கம்பூனிஸ்ட் கட்சி
கல்வி----------
தொழில்----------
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்ஆர். மணிமேகலை

கே. சுப்பாராயன் இந்தியாவின் 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர். முன்னதாக இரண்டு முறை திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் 2004 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தேர்தல் தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டின்படி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, கோயம்புத்துார் பாராளுமன்றத் தொகுதியில் சுப்பாராயன் போட்டியிட்டார். தற்போது நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவர் திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.