Pon Radhakrishnan

பொன். இராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் - பா.ஜ.க
முழுப் பெயர்பொன். இராதாகிருஷ்ணன்
பிறந்த தேதிMarch 1, 1952 (age 67)
பிறந்த இடம்நாகர்கோயில்
கட்சி பெயர்பாரதிய ஜனதா கட்சி
கல்விசட்டப் படிப்பு
தொழில்அரசியல்வாதி / வழக்கறிஞர்
தந்தை பெயர்பொன்னையா ஐயப்பன்
தாயார் பெயர்தங்க கனி
துணைவியார் பெயர்----------

பொன். இராதாகிருஷ்ணன் இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. கன்னியாகுமரி மாவட்டம்அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச் 1ந் தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை விருதுநகரிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒன்பதாவது மக்களவைக்கு 1999ல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009–ம் ஆண்டு தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2–ம் இடத்தை பிடித்தார். 2014ல் நடந்த தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.